உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள்: பாஜக அபாரம் 43% வாக்குகள் சமாஜ்வாதி 31% - காங்கிரஸ் வெறும் 3% மட்டுமே
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் 43% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் 43% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை விட அதிகமாகும். காங்கிரஸ் கட்சி வெறும் 3% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது இது கடந்த 2017ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவாகும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் பாஜக - சமாஜ்வாதி இடையே இருமுனை போட்டி நிலவினாலும், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
கருத்துக்கணிப்புகள் சொன்னது போலவே பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கிறது. வாக்குசதவிகிதமும் கடந்த தேர்தலில் பெற்றதை விட இந்த தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

பாஜக வாக்கு சதவிகிதம்
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் 43% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை விட அதிகமாகும். இரண்டாவது இடத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி 31% சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 10% அதிகமாகும்.

யோகி ஆதித்யநாத்
கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் 72% வாக்குகள் பெற்றுள்ளார்; முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட்ட பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் வெறும் 3.5% வாக்குகள் பெற்றுள்ளார்.

பிஎஸ்பி அந்தோ பரிதாபம்
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருகாலத்தில் ஆளுங்கட்சிகளாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி அந்தோ பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிஎஸ்பி மொத்தமே 13% சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலில் பெற்றதை விட 9 சதவிகிதம் குறைவாகும். காங்கிரஸ் கட்சி 3%சதவிகித வாக்குகளை பெற்று அழிவின் விளிம்பு நிலைக்கு போயுள்ளது. இது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 3% சதவிகிதம் குறைவாகும்.
Recommended Video

தேய்ந்து போன காங்கிரஸ்
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக பிரியங்கா காந்தி அந்த கட்சியின் முகமாக வலம் வந்தார். மிகப்பெரிய போராட்டங்களை ஆளும் அரசுக்கு எதிராக நடத்தினார் என்றாலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை வாக்குகளையும் பெற முடியவில்லை. கிராமத்து பக்கங்களில் பழமொழி சொல்வது போல கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக காங்கிரஸ் கட்சி தேய்ந்து ஓய்ந்து போய்விட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications