Vaiko: தனி சின்னம்.. கூடுதல் தொகுதிகள்.. லிஸ்ட் போட்ட மதிமுக.. அதிர்ச்சியில் திமுக
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மதிமுக, தனித்து போட்டி என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது [Vaiko].
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது போன்ற நகர்வுகளால் திமுக களத்தில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.

திமுக - மதிமுக பேச்சுவார்த்தை
திமுக - மதிமுக இடையே அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன், மதிமுக பேச்சுவார்த்தை குழுவினர் ஆலோசனை நடத்தினர். கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில், மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டனர்.
மதிமுக சார்பில் கூடுதல் தொகுதிகளுடன் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். திமுக சார்பில் இந்த முறையும் மதிமுகவை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தி வருகிறார்கள். ஒருவேளை மதிமுக தனி சின்னத்தில் போட்டி என்பது முடிவு செய்யப்பட்டால் கடந்த முறை போட்டியிட்டதை விட குறைவான தொகுதிகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளது.
தனி சின்னம் போட்டி
மதிமுக அவை தலைவர் அர்ஜுன ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும். எவ்வளவு தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறோம் என்பதை பின்னர் அறிவிக்கிறோம். திமுகவிடம் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கவும் கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம்.
இப்போது முதல் கட்ட பேச்சுவார்த்தை தான் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து திமுக அழைத்தவுடன் வருவோம். நாங்கள் இன்னும் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வழங்கவில்லை. மதிமுக எங்கள் சின்னத்தில் தனியாக நிற்கும் என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றவற்றை இறுதியானதும் சொல்கிறேன்" என்றார்.
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications