ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் - வைரமுத்து
ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை: இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து தனது
ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை அடுத்தடுத்து சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி என சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்குப் பரவியது. அங்கும் கல்லூரி நிர்வாகத்தால் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்
உச்சகட்டமாக இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த இந்துத்துவ மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறினர். உடனே வெகுண்டெழுந்த அந்த மாணவி அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது.கல்லூரி வளாகத்தில் இருந்த தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்த கம்பத்தில் ஏறிய மாணவர் ஒருவர் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவி கொடியை பறக்கவிட்டனர். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

நாடாளுமன்றத்தில் அனல்
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது. நாடாளுமன்றத்திலும் ஹிஜாப் விவகாரம் அனலை பற்ற வைத்துள்ளது.

வைரமுத்து ட்வீட்
இதனிடையே கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கல்வியின் நோக்கங்களுள் ஒன்று பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒருகூரையின் கீழ் ஒன்றுபடுத்துவது; ஒன்றுபட்ட சமூகத்தை இரண்டுபடுத்துவது அல்ல என்று பதிவிட்டுள்ளார். ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications