சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Valimai: வலிமைன்னா என்னா தெரியுமா?.. Strength, Power-ஐ தாண்டி அஜித் சொன்ன புதிய விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: 2 ஆண்டுகளாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை குறித்த மிகப் பெரிய "அப்டேட்" கிடைத்துவிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் அஜித்குமார் நேர்மையான போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். இந்த படத்தில் சென்னையில் இளைஞர்களை கெடுக்கும் போதை பொருட்களை சப்ளை செய்யும் மிகப் பெரிய நெட்வொர்க்கை பிடிக்கிறாரா இல்லையா என்பதுதான் வலிமை படத்தின் திரைக்கதை.

சின்ன சின்ன தவறுகளை செய்யும் நபர்களை விரட்டி பிடிக்கிறார். அவ்வாறு விரட்டி பிடிக்கும் ஒருவரிடம் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கிறார். அப்போது எத்தனையாவது வரை படிச்சிருக்கிறாய் என அஜித் கேட்பார், அதற்கு அந்த திருடன், 5ஆவது வரை படித்தேன், அதற்கு பிறகு எனது அப்பா இறந்துவிட்டார், அதனால் படிக்கவில்லை என்பார்.

போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன் போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன்

வறுமையில் தப்பா?

வறுமையில் தப்பா?

அதற்கு அஜித், ஏன் 5ஆவது வகுப்புக்கு மேல படிக்கக் கூடாதுனு சாகும் போது உங்கப்பா சத்தியம் வாங்கிட்டாரா என கேட்பார். பின்னர் எதற்காக திருடினாய் என கேட்ட போது, அந்த நபர், ஏதோ வறுமையில் தப்பி பண்ணிட்டேன் என்பார். அதற்கு அஜித், வறுமையில் தப்பு பண்ணிட்டேனு சொல்லி உழைச்சி சம்பாதிக்கிற ஏழைகளை கேவலப்படுத்தாதே என்பார்.

சத்திய சோதனை

சத்திய சோதனை

பின்னர் அந்த திருடனின் மனைவியை வரவழைத்து அவரிடம் கட்டாக பணத்தை கொடுத்து, இதை செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறும் அஜித், சத்திய சோதனை புத்தகத்தை கொடுத்து , உன் கணவர் வீட்டுக்கு வந்ததும் இதை அவருக்கு படித்துக் காட்டு என்பார். சிறிய கேஸில் ஸ்டேஷன் சென்றாலே அடித்து துவம்சம் செய்யும் இந்த காலத்தில் தவறு செய்பவர்கள் திருந்த சத்திய சோதனையை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

போதை பொருள்

போதை பொருள்

அது போல் சென்னையில் நடக்கும் போதை பொருள் சப்ளை கும்பலை பிடிப்பதற்காக அஜித், கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் போது அவரை வரவேற்கும் அதிகாரி ஒருவர் வெல்கம் டு தி சென்னை சார் என கூறி உங்களை வரவேற்க மக்கள் People's Cop என்ற ஹேஷ்டேக்கை டிரென்டாக்கி வருவதாகவும் கூறுவார். மக்கள் முதல்வர், மக்கள் பிரதமர் என்ற வரிசையில் People's Cop டிரென்ட் செட்டாக மாறியுள்ளது.

திருட்டு பயலா?

திருட்டு பயலா?

வில்லன் கார்த்திகேயன் முதல்முறையாக அஜித்திடம் பேசுவார். அப்போது அஜித், சொல்லுடா திருட்டு பயலே என்பார். அதற்கு வில்லன், திருட்டுப் பயலா, ஒரு பொருளை ஒருத்தனால் காப்பாற்ற முடியவில்லை என்றால் அதை வச்சிருக்கும் தகுதியை அவன் இழந்துவிடுகிறான். வலிமையா இருக்கிறவன் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துப்பான் என்பார்.

வலிமை என்றால் என்ன?

வலிமை என்றால் என்ன?

அதற்கு அஜித், வலிமைன்றது அடுத்தவனை காப்பாத்தத்தான், அழிக்க இல்ல! நல்லவன் காப்பாத்துவான், கெட்டவன் அழிப்பான். நல்லவன்தான் ஜெயிப்பான் என்பார். அதற்கு வில்லன், நல்லது கெட்டது என்ற வார்த்தையே இயற்கைக்கு எதிரானது. வரலாற்றை படி, நல்லவன் கதையில் மட்டும்தான் ஜெயிப்பான், நிஜத்தில் அல்ல என ஒரு டயலாக் வரும்.

English summary
Valimai: Here are the punches of Ajithkumar's Valimai film which released on Feb 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X