சும்ம ஸ்டைலா கெத்தா.. மலேசியாவில் மாஸ் காட்டும் திருமா! ஸ்டைலான போட்டோக்களை கொண்டாடும் சிறுத்தைகள்!
சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேசிய மக்கள் தேசிய முன்னணி கழகமும் தமிழ் முஸ்லீம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்மபாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய தமிழர் ஒற்றுமை விழா ஷா ஆலம் பகுதியில் விந்தம் விடுதியில் நடைபெற்றது.

திருமாவளவன்
இதில் கலந்து கொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மலேசிய சென்றிருந்த நிலையில், மேலும் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். மலேசியாவில் நடந்த தமிழர் ஒற்றுமை விழாவில் திருமாவளனுடன், மலேசிய மக்கள் தமிழர் முன்னணி கழகத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.ஜி. சேகரன் தலைமையில் தமிழ்முஸ்லீம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்கள் பஷீர், வாஹித் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.

போட்டோக்கள் ட்ரெண்ட்
இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனின் புகைப்படத்துடன் தபால் தலைகளும் வெளியிட்டப்பட்டது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மலேசியாவில் பங்கேற்ற பின் மலேசிய பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறார் திருமாவளவன். மலேசிய பயணத்தின் போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மாஸாக போஸ்
டார்க் ஆரஞ்சு வண்ண பிரிண்டட் சட்டையில் கருப்பு பேண்ட் வெள்ளை சூ என கலக்கலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கால் மேல் கால் போட்டு மாஸாக அவர் அமர்ந்திருக்கும் காட்சி கபாலி படத்தை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். திருமாவளவன் இது போன்று ஸ்டைலாக உடை உடுத்துவது ஒன்றும் புதிதல்ல.

கோட் சூட்
அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை என்றுதான் இருப்பார்கள் என்ற கொள்கையை உடைத்து எப்போதும் வண்ண வண்ண உடை அணிவதும் அதை எப்போதும் இன் செய்து ஃபார்மலாக அணிவது திருமாவளவனின் ஸ்டைல். அதற்குப் பிறகுதான் பல தலைவர்களே அவரை பின்பற்ற தொடங்கினர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் கோட் சூட்டோடு எடுத்த போட்டோ சூட் சமூக வலைதளங்களை ஒரு கலக்கு கலக்கியது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications