சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெப்படி.. பாதிக்கப்பட்ட ஜி.ஆர்.சுவாமிநாதனே நீதிபதியா? சவுக்கு சங்கரை “ரிலீஸ்” பண்ணுங்க -திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: நீதிமன்ற அவமதிப்புக்கு 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கரை விடுவித்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 'நீதிமன்ற அவமதிப்பு' என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக உள்ளது.

நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா? நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

17 வயது.. செக் வீராங்கனைக்கு ரூ.2.38 கோடி செக்! சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் -கவுரவித்த ஸ்டாலின் 17 வயது.. செக் வீராங்கனைக்கு ரூ.2.38 கோடி செக்! சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் -கவுரவித்த ஸ்டாலின்

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர். அந்தவகையில் தான் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு

அக்குற்றத்துக்கு அதிக அளவு தண்டனை என்னவோ (ஆறு மாதங்கள்) அதனையே அளித்துள்ளனர். இது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஆறு மாத சிறை

ஆறு மாத சிறை

அதற்காக கடந்த ஆண்டு விசிக சார்பில் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம். நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

இயற்கை நீதி

இயற்கை நீதி

இந்த தண்டனை இயற்கை நீதிக்கு (Natural justice) எதிரானதாக உள்ளது. எனவே, இதனை நீதிமன்றமே ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும். பொதுவாக ஒரு வழக்கில் வாதி - பிரதிவாதி என இரண்டு தரப்பு இருக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்கும் இடத்தில் நீதிபதி இருப்பார். ஆனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படும் நீதிபதியே தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். எனவேதான் இது இயற்கை நீதிக்கு முரணானதாக உள்ளது என்கிறோம்.

பாதிக்கப்பட்டவரே நீதிபதி

பாதிக்கப்பட்டவரே நீதிபதி

வளர்ந்த நாடுகள் பெரும்பாலானவற்றில் நீதிமன்ற அவமதிப்பு என்னும் பிரிவே சட்டத்தில் இல்லை. பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கில் தாம் மறைமுகமாகத் தொடர்பு கொண்டிருந்தால் கூட அந்த வழக்கை விசாரிக்காமல் விலகிக் கொள்வது வழக்கம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே வழக்கை விசாரித்து தண்டனையும் அளித்திருக்கிறார். இது சட்டப்படி முறையானதல்ல என்று பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பழிவாங்கும் செயல்

பழிவாங்கும் செயல்

1971 ஆம் வருடத்திய நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் அதிகபட்ச தண்டனையே ஆறு மாதம் சிறைதான். இந்த வழக்கில் அந்த அதிகபட்ச தண்டனையை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். இது நீதி வழங்குவது என இல்லாமல் பழிவாங்குவதாக உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்கவில்லை என்ற காரணத்தை கூறித்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

ரத்து செய்ய வேண்டும்

நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது, கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு இந்த தண்டனையை ரத்து செய்ய மாண்புமிகு நீதிபதிகள் முன்வரவேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
VCK president and Chidambaram constituency Member of Parliament Thirumavalavan demand release of Savukku Shankar. He said that complainant G.R.Swaminathan is dealing the case is againt Natural justise and demands to revoke Contempt of court case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X