தமிழக கஜானாவை துடைத்து வச்சிருக்காங்க.. நிதி நிலையை அம்பலப்படுத்த வெள்ளை அறிக்கை- விஜய் அதிரடி
சென்னை: கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று விஜய் கூறியிருக்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பேசிய விஜய், "தமிழ்நாட்டின் கஜானா காலியாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலையை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

எனவே நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறேன். என்ன நிலைமையில் சிஸ்டம் இருக்கிறது என்பதை போய் பார்த்தால்தான் தெரியும்.
நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களில் ஒருவன், உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, அப்படித்தான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தீர்கள். அதெபோல அரசியலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். உங்களில் ஒருவனாக என்னை வரவேற்றீர்கள்.
எனக்காக உடன் நின்றதால் உங்களுக்கும் அவமானங்கள் நேர்தது. அதை பெரிதுப்படுத்தாமல் என்னுடன் நின்று என்னை பெற்றிப்பெற வைத்திருக்கிருக்கிறீர்கள். முதலமைச்சர் கனவை நிஜமாக்கியிருக்கிறீர்கள்.
உறவுகளே சொந்தங்களே! நான் தேவ தூதன் கிடையாது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றமாட்டேன். எது சாத்தியமோ அதை செய்வேன். சாத்தியமில்லாததையும் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு புதியதாக பொறுப்பேற்றபோது அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி












Click it and Unblock the Notifications