அனுபவம் இல்லாதவங்களுக்கு.. அரசியல் எதற்கு.. தவெக நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளாராம். அதன்படி.. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாம்.
1. தமிழ்நாடு முழுக்க உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவில்.. ஊடகங்களில் செய்தி தொடர்பாளர்கள் தவிர யாரும் பேச வேண்டாம்.
2. அதிகாரபூர்வமாக கட்சி சார்பாக யாரும் பேச வேண்டாம். அறிக்கை எதையும் லெட்டர் பேட் வைத்து வெளியிட வேண்டாம்.
3. சிறப்பு பேட்டிகளை வெளியிட வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்து அறிக்கை அல்லது புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாம்.
என்ன காரணம்?
1. விஜய் இப்படி உத்தரவு பிறப்பிக்க காரணம் உள்ளது என்கிறார்கள். கட்சி நிர்வாகிகளுக்கு அனுபவம் இல்லை என்று விஜய் நினைக்கிறாராம்.
2. முக்கியமாக கட்சி நிர்வாகிகள் எதையாவது பேசி அது சர்ச்சையில் சிக்க கூடாது. தேவையின்றி பேசி அது பெரிய சர்ச்சையாக கூடாது.
3. ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு அனுபவம் இல்லை என்பதால் அவர்கள் கூடுதல் பிரச்சனைகளை இழுத்துவிடக்கூடாது என்று விஜய் இப்படி உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
4. அதோடு நீங்கள் தவறாக பேசி சர்ச்சைகளில் சிக்கினால் அதற்கு கட்சி பொறுப்பில்லை என்றும் விஜய் தரப்பு உத்தரவிட்டு உள்ளதாம்.

5. இது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டால் அந்த வழக்கிற்கு கட்சி உதவி செய்யாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்களாம்.
6. ஏற்கனவே கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் போலீசார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரின் குடும்பத்தினர் உடன் ஏற்கனவே தவெக நிர்வாகிகள் யாரும் பேசாமல் ஒதுங்கி உள்ளனர்.. அதேபோல் புதிதாக யாராவது வழக்கில் சிக்கினாலும் அவர்களுக்கும் கட்சி உதவாது என்று தலைமை கூறிவிட்டதாம்.
7. ஏற்கனவே இணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய 25 பேர் கைது செய்யப்பட்டு செய்யப்பட உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டு உள்ளது. அதேபோல் நீங்கள் எதாவது பேசி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளாராம்.
8. கரூர் விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள், விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் பலரும் கூட இதேபோல் இது அரசின் சதி என்று பொய்யாக வதந்திகளை பரப்பினார்கள். அவர்கள் எல்லாம் அந்த போஸ்டுகளை தற்போது டெலிட் செய்துள்ளனர். இதற்கு பின் விஜயின் உத்தரவே காரணம் என்கிறார்கள்.
கட்சி நிர்வாகிகளுக்கு அனுபவம் இல்லை என்பதால் அவர்கள் கூடுதல் பிரச்சனைகளை இழுத்துவிடக்கூடாது என்று விஜய் இப்படி உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் அரசியல் அனுபவம் இல்லாத மாவட்ட செயலாளர்களை வைத்து நீங்கள் எப்படி அரசியல் செய்ய போகிறீர்கள்.. அனுபவம் இல்லாத உங்களுக்கு அரசியல் எதற்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வைக்க தொடங்கி உள்ளனர்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications