சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயம்பேட்டில் என்ன நடக்கிறது.. ஒன்றுகூடிய தேமுதிக நிர்வாகிகள்.. "லிஸ்ட்" வர போகுதாமே..?

தேமுதிக தலைமை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது தேமுதிக.. இந்நிலையில், அக்கட்சி தலைமையானது இன்று 3வது நாளாக தன்னுடைய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன... இதில் பெரும்பாலும் கட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன..

நடந்து முடிந்த சமீபத்திய தேர்தல்களில் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது தேமுதிக.. கூட்டணியும் வைக்க முடியாமல், தேர்தலில் வெற்றியும் பெற முடியாமல் திணறி வருகிறது அக்கட்சி.

நியோ வைரஸ் பற்றி பீதி வேண்டாம்.. மக்களே பாதுகாப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்- மா.சுப்பிரமணியன்நியோ வைரஸ் பற்றி பீதி வேண்டாம்.. மக்களே பாதுகாப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்- மா.சுப்பிரமணியன்

 கட்சிக்கு செலவு

கட்சிக்கு செலவு

இப்போது விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேறு வழியில்லாமல் தயாராகி வருகிறது.. தேமுதிகவில் ஏற்கனவே இருந்த பசையுள்ள பார்ட்டிகள் விலகி சென்றுவிட்ட நிலையில், கட்சிக்கு செலவு செய்ய முடியாத நிலைமை உள்ளது. அதனால் தேர்தல் சமயத்தில் நிர்வாகிகள் திணறும் போக்கும் தொடர்ந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட, நிர்வாகிகளுடன் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா ஆலோசிக்க உள்ளதாக கடந்த வாரமே செய்திகள் கசிந்தன..

 அதிமுக

அதிமுக

அதேசமயம், கட்சி தொண்டர்களை வலுக்கட்டாயமாக களமிறக்கினாலும் அதிகாரம் மற்றும் பண பலத்தில் களமிறங்கும்ஆளும் கட்சியையும் , பணபலத்தில் களமிறங்கும் அதிமுகவையும் எதிர்த்து நம்மால் வெற்றிபெற முடியாது என்பதால் தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்ளலாம் என மாவட்ட செயலாளர்களோடு கலந்தாலோசிக்க பிரேமலதா முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆலோசனை

ஆலோசனை

இந்த முறையும் தனித்து போட்டி என்று அதிரடியாக தேமுதிக அறிவித்துவிட்ட நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளுடன் தேமுதிக தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.. ஏற்கனவே 2 முறை முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளது.. இன்று 3வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறது.. தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது..

பிரேமலதா

பிரேமலதா

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது... கடந்த முறை போலவே, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பல நிர்வாகிகள் தயங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட் திங்கட்கிழமை வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. எப்படி பார்த்தாலும் தேமுதிகவின் தேர்தல் ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டிப்பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.

English summary
Vijayakanths DMDK is going to contest alone and discussion with executives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X