நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்! சென்னைவாசிகளே சூப்பர் சான்ஸ்! பிக் ஸ்கிரீனை மிஸ் பண்ணிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய நிகழ்வை பொதுமக்களும், அறிவியல் ஆர்வலர்களும் கண்டு வியக்கும் வகையில் பெரிய திரையில் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது அறிவியல் பலகை அமைப்பு.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நாளை மாலை 5 மணி முதல் இந்த நேரலை ஒலிப்பரப்பாகவுள்ளது. இந்த நிகழ்வை இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையின் மைல்கல்லாக பார்ப்பதாக அறிவியல் பலகை அமைப்பு பெருமிதம் தெரிவித்துள்ளது.

Vikram Lander landing on the moon! Chennai residents have a super chance! Dont miss the big screen!

இஸ்‌ரோவின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைக்கவுள்ள இந்த வெற்றியை நாம் கூட்டாக கொண்டாடுவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் பெரிய திரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை கண்டு ரசிக்க வருகை தரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கள் குழந்தைகளோடு இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்தை பற்றியும் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவதற்கான காரணம் பற்றியும் எளிய முறையில் அறிந்துகொள்ளலாம்.

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சியை சினிமா படத்தை போல் பிக் ஸ்கிரீனில் பார்க்க வேண்டும் என்றால் Tamil Nadu Science and Technology Centre, Gandhimandapam Road Kotturpuram Chennai 600 025 & Ariviyal Palagai, Chennai என்ற முகவரிக்கு தான் நீங்கள் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு அறிவியல் பலகை அமைப்பு நிர்வாகி ஸ்ரீகுமார் என்பவரது 9677297733 அலைபேசி எண்ணில் அழைத்து தெரிந்துகொள்ளலாம்.

நாளை மாலை 5.45 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் நேரம் மாற்றப்பட்டு நாளை மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+