சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரையில் சவால் விட்ட வனிதா.. திரையில் செய்த விக்ரமன்! பிக்பாஸில் “நோஸ்கட்”! ரவுண்டு கட்டிய ஆர்மி

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் சொல்லும் விசயத்தை விக்ரமன் செய்தால் அவரை முதல் ஆளாக ஆதரிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை வனிதா சவால் விட்ட நிலையில், அவர் சொன்ன விசயத்தை நேற்று செய்து இருக்கிறார் விக்ரமன். இந்த நிலையில் வனிதா பேசிய வீடியோவையும், நேற்று விக்ரமன் பேசியதையும் எடிட் செய்து ட்விட்டரில் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், பத்திரிகையாளருமான விக்ரமன் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.

சக போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை முகஸ்துதி காட்டாமல் துணிச்சலாக தட்டிக்கேட்பவராக உள்ளார். பிக்பாஸ் வீட்டில் யாராவது ஒருவர் பிற்போக்குத் தனமான கருத்துக்களை தெரிவித்தாலோ முதல் ஆளாக அதை எதிர்த்து வருகிறார்.

கருப்பா.. கொலை கொள்ளை நடக்காம காப்பாத்து! போலீஸ் நடத்திய கிடா வெட்டு..அன்னிக்கு நைட் அரிவாள் வெட்டு!கருப்பா.. கொலை கொள்ளை நடக்காம காப்பாத்து! போலீஸ் நடத்திய கிடா வெட்டு..அன்னிக்கு நைட் அரிவாள் வெட்டு!

தட்டிக்கேட்கும் விக்ரமன்

தட்டிக்கேட்கும் விக்ரமன்

குறிப்பிட்ட தரப்பினர், சமூகத்தினர் மீது மேம்போக்கான விமர்சனங்களை பொது புத்தியிலிருந்தோ காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ முன்வைத்தாலோ, பிறரை உருவ கேலி செய்தாலோ முதலில் அதை தட்டிக்கேட்பது விக்ரமன் தான். சக போட்டியாளரான ஷிவின் ஒரு முறை மீன்காரிபோல் கத்தாதே என சொன்னதை அப்போதே கண்டித்தார் விக்ரமன்.

முற்போக்கு கருத்துக்கள்

முற்போக்கு கருத்துக்கள்

அந்நியன் தன்னை பிக்பாஸ் நடிக்க சொன்னபோது அந்த திரைப்படத்தில் பிற்போக்கான கருத்துக்கள் இருப்பதால் தன்னுடைய கொள்கைக்கு முரணாக இருக்கும் என்று கூறி அதில் தனக்கு உடன்பாடு இல்லை என அவர் தெரிவித்தார். இப்படி தொடர்ந்து தன்னுடைய கொள்கைளை விட்டுக்கொடுக்காமல் விக்ரமன் விளையாடி வருகிறார்.

அம்பேத்கர், பெரியார்

அம்பேத்கர், பெரியார்

கடந்த வாரம் அண்ணல் அம்பேத்கருக்கு விக்ரமன் எழுதிய கடிதம் பிக்பாஸில் ஒளிபரப்பு செய்யப்படாததற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், விஜய் டிவி மறுநாள் அதை ஒளிபரப்பியது. சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மீண்டும் ஒருமுறை விக்ரமனிடம் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் குறித்து பேச வைத்து பாராட்டினார். அதேபோல், பெரியாரின் கருத்துக்களையும் பல இடங்களில் பேசி வருகிறார் விக்ரமன்.

கதிரவனுக்கு புத்தர் சிலை

கதிரவனுக்கு புத்தர் சிலை

இந்த நிலையில் தனக்கு பிடித்த பொருளை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க கமல்ஹாசன் சொன்னபோது தனக்கு ஒரு நண்பர் கொடுத்த புத்தர் சிலையை சக போட்டியாளரான கதிரவனிடம் கொடுத்து நியாயமான கேள்விகளை எழுப்புமாறும், தவறுகளை தட்டிக்கேட்குமாறும், சினிமாவில் நடிப்பதாக இருந்தால் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

பிக்பாஸ் விமர்சனங்கள்

பிக்பாஸ் விமர்சனங்கள்

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக யூடியூப் சேனல்களில் தினசரி விமர்சன வீடியோக்களும் இரவு ஒளிபரப்பாகின்றன. இதில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் வனிதா விஜயகுமார், சுரேஷ், தயாரிப்பாளர் ரவீந்திர் உள்ளிட்டோர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பிக்பாஸ் விமர்சங்களை தினசரி வழங்கி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விக்ரமனுக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பதாக விக்ரமன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

குறிப்பாக நடிகை வனிதா பல இடங்களில் விக்ரமனை கடுமையாக ஒருமையில் விமர்சித்து வருகிறார். நேற்று புத்தரின் சிலையை விக்ரமன் கொடுத்ததையும் சுட்டிக்காட்டி அவர் கமல்ஹாசனையும் சேர்த்து விமர்சித்தார். அதேபோல் கடந்த வாரம் விக்ரமன் அணிந்திருந்த ஆடையை வைத்து அம்பேத்கர் பற்றி பேசுபவர் இப்படி ஒரு ஆடை அணியலாமா என அவர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.

விக்ரமனுக்கு சவால் விட்ட வனிதா

விக்ரமனுக்கு சவால் விட்ட வனிதா

இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் வனிதா பேசியபோது, "விக்ரமன் ரொம்ப நல்லன் என நிறைய பேர் கமெண்ட் பன்றாங்க. என்ன நல்லது பண்ணுனான் இதுவரைக்கும். வார சம்பளத்தையும், அவன் வெற்றிபெற்றவுடன் வரும் பணத்தையும் எடுத்து சென்று அரசியலுக்கதான் செலவு செய்ய போகிறானே தவிர, மக்களுக்கு தான தர்மமாக கொடுக்கப்போறது இல்லை. நாம் சொல்வதை கேட்காமல் பிக்பாஸிலேயே அப்படி ஏதாவது அறிவித்தால், நான் முதல் ஆளாக ஆதரிக்க ரெடியாக இருக்கிறேன்." என்றார்.

விக்ரமனின் கனவு

விக்ரமனின் கனவு

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம், வெளியில் சென்றவுடன் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விக்ரமன், "இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்க ஒரு அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. எளிய மக்கள், விளிம்பு நிலை மக்களுக்கான டிரஸ்ட் தொடங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதை இந்த வருடம் தொடங்குவிடுவேன் என்று நினைக்கிறேன்." என்றார்.

வனிதாவிடம் கேள்வி

இதை கேட்ட கமல்ஹாசன் "நல்ல முயற்சி. வெளியில் வரும்போது அதற்கான அவசியம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்." என்று பாராட்டினார். இந்த 2 வீடியோக்களையும் சேர்த்து விக்ரமன் ரசிகர்கள் ட்விட்டரில் வனிதாவை டேக் செய்து தான் விட்ட சவாலை ஏற்று விக்ரமனை வனிதா ஆதரிப்பாரா கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

English summary
When actress Vanitha challenged Vikraman to be the first person to support him if he does what I say on Bigg Boss show, Vikraman did what she said yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X