அரசுப் பேருந்துகளில் "7ub விஐபி பெர்த்”.. யாருக்கு தெரியுமா?.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேருந்துகளில் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்குவது தொடர்பாக கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில் இந்நாள் மற்றும் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், அவர்களது மனைவி போன்றோருக்கு 7ub இருக்கை மற்றும் விஐபி பெர்த் அட்வென்ட் எனப்படும் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து கிளை மேலாளர் களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

VIP Berth allotment for MLAs in Tamil Nadu government buses

அந்த கடிதத்தில் 'இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர் தம் மனைவி, துணையாளர் ஆகியோரை இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கவேண்டும்.

இனி வரும் காலங்களில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர் சாதனமுள்ள படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர்சாதனமில்லா படுக்கை வசதி கொண்ட பேருந்து ( NSS , ASS , ASL , NSL ) ஆகியவற்றில் சட்டமன்ற உறுப்பினர்களை படுக்கையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தம் மனைவி மற்றும் துணையாளர் ஆகியோரை இருக்கையில் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . எனவே , அனைத்து படுக்கை வசதி கொண்ட பேருந்துகளிலும் 7UB முக்கிய பிரமுகர்களுக்கான படுக்கை வசதி ஒதுக்கீடு விஐபி பெர்த் அலாட்மெண்ட் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+