மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்தார் விவேக்... அவரது மறைவு பேரிழப்பு - பிரேமலதா
எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக், தனது மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்ததை பார்த்திருக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை: எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக், தனது மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்ததை பார்த்திருக்கிறோம். என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விவேக்கின் அகால மரணம் திரையுலகினருக்கு மட்டுமல்ல, குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. தமிழகத்துக்கே இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகினர் பலரும் அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, 'விவேக்கின் அகால மரணம் திரையுலகினருக்கு மட்டுமல்ல, குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. தமிழகத்துக்கே இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.
சின்னக் கலைவாணர் என்று திரையுலகத்தாலும் மக்களாலும் போற்றப்பட்டவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைக் கொண்ட அவர் லட்சக் கணக்கான மரங்களை நட்டார். சமூக சேவைகளை செய்தார்.
எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக், தனது மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்ததை பார்த்திருக்கிறோம் என்றும் கூறினார் பிரேமலதா.
கேப்டன் மீது மிகப்பற்றுக் கொண்டவர். விஜயகாந்த் சொன்னதன் பேரிலேயே அஞ்சலி செலுத்த வந்தேன். தேமுதிக சார்பாக விவேக்கின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications