சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செயற்கைக்கோளை கூட நம்ப முடியாது.. தமிழகத்தில் மழை பெய்ய என்ன காரணம்.. ரமணன் சொன்ன சீக்ரெட்!

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து தற்போது முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.

ஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி! ஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி!

என்ன காரணம்

என்ன காரணம்

ரமணன் தனது பேட்டியில், பொதுவால் மழை வருவதற்கு சில காரணம் இருக்க வேண்டும்.உதாரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது சுழற்சி இருக்க வேண்டும். கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.

காற்று

காற்று

மஹாராஷ்டிரா, குஜராத் வழியே இது ராஜஸ்தான் சென்றுவிட்டது. ஆனால் இதனால் அரபிக்கடல் காற்று தமிழகம் வழியாக இழுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் மேலடுக்கு சுழற்சியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்த காற்று தமிழகம் வழியாக வடக்கு நோக்கி இழுக்கப்படுவதால் மழை பெய்கிறது.

எப்படி செல்கிறது

எப்படி செல்கிறது

மேலடுக்கில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று செல்வதால்தான் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையை கணிக்க முடியாது. ஏனென்றால் காற்று எப்போது வீசும் என்பதை கணிக்கவே முடியாது. அதிகாலையில் வீசும் காற்று மறுநாள் மழையாக மாறும். இதை முன்பே கணிப்பது கஷ்டம்.

சாட்டிலைட் இல்லையா

சாட்டிலைட் இல்லையா

இதில் நாம் சாட்டிலைட் புகைப்படங்களையும் கணிக்க முடியாது. சாட்டிலைட் புகைப்படங்கள் காற்று காரணமாக நொடிக்கு மாறும். இதனால் மழை பெய்ய போவதை நாம் முன் கூட்டியே கணிக்க முடியாது, என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

English summary
We can't predict this perfectly says Former CMD director Ramanan in Tamilnadu Rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X