உள்ளாட்சி தேர்தல் -எங்க கிட்ட ஏன் புகார் கொடுக்கிறீங்க? அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலடி
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம்தான் புகார் சொல்ல வேண்டுமே தவிர தங்களிடம் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிக முறைகேடுகள் நடைபெற்றதாக கடந்த 2 நாட்களாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களையும் பாஜகவினர் வெளியிட்டிருந்தனர். கோவையில் ஒரு திருமண மண்டபத்தில் திமுகவினர் பணம் கொடுப்பதாக எடுக்கப்பட்ட வீடியோவும் இதில் அடங்கும்.

அண்ணாமலை ட்விட்டர் பதிவு
இந்த உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வீடியோக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அண்ணாமலை. அத்துடன் @ECISVEEP என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் ஐடியை சேர்த்து, வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருக்கக் கூடாது எனவும் அந்த ட்விட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் ஆணையம் பதிலடி
இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தமது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையின் @annamalai_k ட்விட்டர் ஐடிக்கு பதில் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையம் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது இல்லை.

தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த தேர்தல்களை வேறு அதிகாரிகள்தான் நடத்துகின்றனர். அரசியல் சாசனத்தின் 243 K , 243 ZA கீழ் மாநிலங்களின் தேர்தல் ஆணையங்கள் உள்ளன. உங்கள் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு தெரியுமா பட விளக்கம்
அத்துடன் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் ஒரு படத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது. அதில் அரசியல் சாசனத்தின் 324-ன் படி தலைமை தேர்தல் ஆணையம் எந்தெந்த தேர்தல்களை நடத்தும் என்கிற பட்டியலை கொடுத்திருப்பதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வராது என்றும் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி உள்ளது. பல்வேறு தரப்பினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் இதில் பதிவிட்டும் வருகின்றனர்.
-
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications