சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக காவல்துறைக்கு பறந்த உத்தரவு.. டிஜிபி சைலேந்திர பாபுவின் முக்கிய அட்வைஸ்.. பூரித்த போலீஸ்!

பெண் போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அட்வைஸ் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறை சார்பாக நடைபெற்ற முகாம் ஒன்றில், பெண் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, சைலேந்திர பாபு பல அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக உள்ளார்.

வான்வழி தடை கோரிக்கை மூலம் 3-ம் உலகப் போரை தூண்டிவிடும் உக்ரைன் அதிபர்? உஷாராகும் யு.எஸ்., ஐரோப்பா வான்வழி தடை கோரிக்கை மூலம் 3-ம் உலகப் போரை தூண்டிவிடும் உக்ரைன் அதிபர்? உஷாராகும் யு.எஸ்., ஐரோப்பா

பதவியேற்றதுமே இவர் சொன்ன 2 விஷயங்கள், ஒன்று, ரவுடிகளை ஒடுக்குவது, மற்றொன்று குழந்தைகள் கடத்தலை ஒழிப்பது என்றார்..

 குழந்தைகள் கடத்தல்

குழந்தைகள் கடத்தல்

அதன்படியே முதல்விஷயமாக குழந்தைகள் கடத்தல் கும்பல்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார்.. அனைவரையும் அதிரடியாக கைது செய்தார்.. இந்த விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக டிஜிபியை பாராட்டியதாகவும் செய்திகள் வந்தன.. இதற்கு பிறகு, பல வருட காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடிகளையும் நாலாபுறமும் வேட்டையாடி கைது செய்தார்.. இப்படி டிஜிபியின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அறிவுரை

அறிவுரை

இந்நிலையில், பெண் காவலர்களுக்கும் ஒரு முக்கிய அறிவுரையை சொல்லி உள்ளார்.. சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த, பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 காவல்துறை

காவல்துறை

சென்னை காவல் துறை சார்பில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இதில் பேசிய சைலேந்திரபாபு, "தமிழ்நாடு காவல் துறையில் காவல் துறை உயர் அதிகாரிகள், காவல் ஆளுநர்கள் என மொத்தம் 23 ஆயிரம் பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தமிழ்நாடு காவல் துறையில் 21 சதவீதம் ஆகும். சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து, வேளாண், காவல், நீதி என பல துறைகளில் தமிழகத்தில் பெண்கள் சிறகடித்து பறக்கின்றனர்...

 உடல்நலம்

உடல்நலம்

அவர்களுக்கான வாய்ப்புகளும், வரவேற்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. பெண்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு சமூகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை நான் அளவிடுவேன் என அம்பேத்கர் சொன்னார்.. காவல் துறையில் பெண் காவலர்கள் மிக முக்கிய பங்கு வகுக்கின்றனர். அத்தகைய பெண் காவலர்கள் வருமுன் காப்போம் என்பதை கடைபிடிக்க வேண்டும். பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும். அவர்கள் நன்றாக இருந்தால் தான் காவல் துறை நன்றாக இருக்கும்" என்று கேட்டுக் கொண்டார்.

English summary
What advice did the DGP Sylendra babu give to the female police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X