சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுவாச பாதை தொற்று என்றால் என்ன?.. கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு.. ரெஸ்ட்தான் இப்ப முக்கியம்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகனுமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கீழ்ப்புற சுவாச பாதையில் தொற்று (lower respiratory tract infection) ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை செய்திக் குறிப்பு வெளியிட்டதை அடுத்து அது குறித்து நெட்டிசன்கள் கூகுளில் தேடி வருகிறார்கள்.

மூச்சுத்திணறல், இருமல், சளி உள்ளிட்டவை நுரையீரலில் தொற்று ஏற்படும் போது நமக்கு உணர்த்தும் சமிக்ஞைகளாகும். இதை கண்டறிந்து உரிய நேரத்தில் சிசிச்சை மேற்கொண்டால் எந்தவித பிரச்சினையும் இன்றிசரி செய்துவிடலாம்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதும் அவருக்கு கீழ்ப்புற சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன? சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?

 தொற்று

தொற்று

இதையடுத்து கீழ்ப்புற சுவாச பாதையில் தொற்று என்றால் என்ன என நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள். அந்த வகையில் அப்படி என்றால் என்ன, அதற்கான சிகிச்சை என்ன, அந்த தொற்றின் அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதை பற்றி எல்லாம் பார்ப்போம். கீழ்ப்புற சுவாச பாதை தொற்று என்றால் நுரையீரலிலோ அல்லது குரல் வளைக்கு கீழ் பகுதியிலோ தொற்று ஏற்படுவதாகும். இது நிமோனியா, பிரான்சிட்டிஸ் மற்றும் காசநோய்களில் ஏற்படும்.

 நோயின் தீவிரம்

நோயின் தீவிரம்

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன எனில் அது நோயின் தீவிரத்தை பொறுத்து இருக்கும். குறைவான தொற்று இருப்போருக்கு மூக்கடைப்பு, வறட்டு இருமல், லேசான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, லேசான தலைவலி ஆகியவை இருக்கும். அதே தொற்று நிறைய இருந்தால் கடும் இருமலுடன் கட்டியாக சளி ஏற்படும், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், தோலில் நிறம் மாறுதல், வேகமாக மூச்சுவிடுதல், மார்பு பகுதியில் வலி, வீசிங் ஆகியவை ஏற்படும்.

மேற்புறம்

மேற்புறம்

கீழ்ப்புறத்தில் தொற்று ஏற்படுவதை போல் மேல் சுவாச பாதையிலும் தொற்று ஏற்படும். இது தொற்று ஏற்படும் பகுதியை பொருத்து கீழ்ப்புற சுவாச தொற்றை விட வித்தியாசமானது. குரல் வளம் இருக்கும் பகுதிக்கு கீழ் புறத்தில் ஏற்படுவது கீழ் புற சுவாச பாதை தொற்றாகும். அதே குரல் வளையிலோ அல்லது அதற்கு மேற்புறத்திலோ ஏற்பட்டால் இது மேல்புற சுவாச தொற்றாகும்.

 மேல்புற சுவாச பாதை

மேல்புற சுவாச பாதை

கீழ்ப்புற சுவாச பாதை தொற்றுக்கு முதன்மை அறிகுறியாக இருமல் இருக்கும். மேல்புற சுவாச பாதை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்மல், தலைவலி, தொண்டையில் வலி உள்ளிட்டவைகளுடன் உடல் வலியும் காய்ச்சலும் இருக்கும். இந்த கீழ்ப்புற சுவாச பாதை தொற்று யாரையெல்லாம் பாதிக்கும் என்பதை பார்ப்போம்.

Recommended Video

    Kamal Hassan மருத்துவமனையில் அனுமதி! | Bigg Boss 5 Tamil, Isaivani
     சளி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

    சளி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

    அண்மையில் காய்ச்சல் அல்லது சளி, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருத்தல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள், அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நோய் பாதிப்பை ஆக்ஸிஜனின் அளவை சரி பார்த்தல். மார்பு பகுதியில் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனைகள், சளி பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமலுக்கு மருந்து கொடுப்பது, ஓய்வு, நிறைய திரவங்களை எடுத்துக் கொள்வது மூலம் இதை சரி செய்யலாம்.

    English summary
    What are Lower Respiratory tract infections? Kamal Haasan has this problem and admitted in the hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X