சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்! இந்தப் பக்கம் எல்லாம் போகாதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    Operation Thamarai | கடுப்பான Bihar CM Nithish Kumar*Politics

    இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை மாமல்லபுரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிக்கட்ட போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

    அது சரி.. ஸ்டாலினை அரசியல் ரீதியாக ரஜினி எப்படி எதிர்கொள்வார்? செஸ் ஒலிம்பியாட்ல பார்த்தீங்கல்ல? அது சரி.. ஸ்டாலினை அரசியல் ரீதியாக ரஜினி எப்படி எதிர்கொள்வார்? செஸ் ஒலிம்பியாட்ல பார்த்தீங்கல்ல?

     செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்

    இந்தியா சார்பில் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 3 ஆணிகளும் பெண்கள் பிரிவில் 3 அணிகள் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு இருக்கிறது. அதேபோல உலகெங்கும் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த பல வீரர்- வீராங்கனை கலந்து கொண்டுள்ளனர். போட்டியின் தொடக்க நிகழ்ச்சி கடந்த மாதம் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிலையில், அங்க தான் நிறைவு விழாவும் நடைபெறுகிறது.

     நிறைவு விழா

    நிறைவு விழா

    செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல முக்கிய பிரபலங்களும் இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை முன்னிட்டு தலைநகர் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

     போக்குவரத்து மாற்றங்கள்

    போக்குவரத்து மாற்றங்கள்

    இன்று 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேவை ஏற்படின் மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

     அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    அதற்குப் பதிலாக வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாகச் செல்லலாம். அதே போன்று ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பிராட்வே சாலையில் இருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

     சாலைகள்

    சாலைகள்

    அதுபோல பிராட்வேயில் இருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டு உள்ளது.

     போலீஸ் வேண்டுகோள்

    போலீஸ் வேண்டுகோள்

    இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள், அவர்களது பயணத் திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவைப் போலவே நிறைவு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chess Olympiad 2022 closing ceremony Chennai traffic changed: (செஸ் ஒலிம்பியாட் தலைநகர் சென்னையில் போக்குவரத்து மாற்றம்) List of traffic diversion announced in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X