கண்ணா.. நம்ம கட்சியை தொடங்கியிருந்தால் இன்னிக்கு கோட்டையில் இருந்திருப்போம்..ரஜினி பரபரப்பு பேச்சு?
சென்னை: கட்சியை தொடங்கியிருந்தால் நிச்சயம் நாம் ஆட்சியை பிடித்திருப்போம் என நேற்று மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. அம்பு எய்துவது மட்டும்தான் பாக்கி என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாக சில விவரங்கள் வெளியாகியுள்ளன. இவை உண்மையில் ரஜினி பேசினாரா என தெரியவில்லை. இருந்தாலும் தகவலறிந்த வட்டாரங்கள் அளித்த தகவல்கள் என கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல்
அந்த கூட்டத்தில் ரஜினி "பேசுகையில்": தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் அரசியல் திட்டத்தை நான் வகுத்து வைத்திருந்தேன். கட்சி தொடங்கி இருந்தால் ஆட்சியை பிடித்திருப்போம். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா வந்துவிட்டது.

வேண்டாம்
மருத்துவர்களும் எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். மேலும் கொரோனா காலத்தில் மக்களை நேரில் சந்திப்பது என்பது இயலாத காரியம். முகக்கவசம் அணிந்து கொண்டு மக்களை எப்படி சந்திப்பது?

கொள்கைகள்
மக்களோடு மக்களாக பழகினால்தான் நம்மை பற்றி மக்களுக்குத் தெரியும். நமது கொள்கைள் என்னவென புரியும்? இனி கொரோனாவே இந்தியாவை விட்டு போனாலும் அடுத்த 2024 நாடாளுமன்றத் தேர்தல், இல்லாவிட்டால் 2026 சட்டசபை தேர்தலில்தான் நாம் போட்டியிட முடியும்.

உடல்நலம்
ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என் உடல்நலம் எப்படியிருக்கும் என தெரியாது. இதனால் என்னால் அரசியலை வருங்காலத்தில் கூட நினைத்து பார்க்க முடியாது. அதனால்தான் வருங்காலத்தில் கூட அரசியலுக்கு நான் வரும் எண்ணம் எனக்கில்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லாத போது மக்கள் மன்றத்தை அப்படியே இயங்க வைத்தால் நாம் என்றாவது ஒருநாள் அரசியலுக்கு வருவோம் என மக்கள் நினைப்பார்கள். அதனால் அதை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக மாற்றிவிடலாம். பழையபடி இந்த மன்றம் மூலம் நற்பணிகளை செய்யலாம் என ரஜினி பேசியதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications