• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லாத்துக்கும் காரணம் "இவங்க"தான்.. மொத்தமாக விஜயகாந்த் ஸ்டைலுக்கு மாறுமா தேமுதிக?!

|

சென்னை: இது எல்லாத்துக்கும் காரணம், யார் காரணம், என்ன காரணம் தெரியுமா? சுதீஷின் சமீபத்திய பேச்சுக்களும், விஜயபிரபாகரனின் ஓவர் வாயும்தான், அதிமுக கடைசி வரை தேமுதிகவிடம் பிடிவாதம் காட்ட காரணமாக அமைந்துவிட்டது.

விஜயகாந்த் இருக்கும்போதுகூட இப்படியெல்லாம் பேசவில்லை.. விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றாலே, மொத்த மீடியாவும் குஷியாகிவிடும்..

காரணம், அவர் ஜாலியாக பேசுவார்.. கோபமாக பேசுவார்.. பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுவார்.. பல்லை கடித்து கொண்டே பேசுவார்.. மொத்தத்தில் விஜயகாந்த், விஜயகாந்த்தாகவே இயல்பாகவே இருப்பார். அதனால்தான், பொதுவெளியில் விஜயகாந்த் தொண்டர்கள் மீது கோபப்பட்டு பேசினாலும், அதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஆனால், விஜயகாந்த் வீட்டில் அப்படி இல்லை.

கொரோனா தடுப்பூசி..திடீரென அதிகரித்த மக்கள் நம்பிக்கை.. சில நாட்களில் 4 மடங்கு உயர்வு..காரணம் இதுதான்

பேச்சு

பேச்சு

இந்த கட்சி கொஞ்சம் வளர்ச்சி பெற்றதுமே ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டனர்.. பிரேமலதா சிறந்த பேச்சாளர்தான்.. ஆரம்பத்தில் இவர் இந்த அளவுக்கு பேசுவாரா என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவரது பேச்சுக்கள் கட்சிக்கு பலம் சேர்த்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.. மோடியே ஒருமுறை வியந்துபோய் பிரேமலதா பிரச்சார பேச்சினை பாராட்டினாராம்.

சுதீஷ்

சுதீஷ்

ஆனாலும், ஒருசில உளறல் பேச்சுக்களும் இருக்கத்தான் செய்தன.. அவைகளில் சில சர்ச்சையாகவும் செய்தது.. இதில் சுதீஷை எடுத்து கொண்டால், ஒவ்வொரு முறையும் கூட்டணி விஷயத்தில் இவர் இல்லாமல் பேச்சு நடக்காது.. ஆனால், இந்த முறை அப்பட்டமாகவே அதிமுக மீதான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டார்.. சர்ச்சையாக கார்டூன் போட்டபோது கூட பெரிதாக எதுவும் தெரியவில்லை. சமீபத்திய கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுகவை இவர் சாடிய விதம், சற்று அதிர்ச்சியை தந்தது எனலாம்.

சசிகலா

சசிகலா

ஒருபக்கம் சசிகலாவை தூக்கி வைத்து அதிமுகவுக்கு பிரேமலதா டென்ஷனை தந்தார் என்றால், சுதீஷின் பேச்சு எல்லைமீறி போனதை மறுக்க முடியாது.. எல்லாவற்றிற்கும் மேலாக விஜயபிரபாகரன் பேச்சு பல தலைவர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.. "விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றவங்க எதுக்குடா எங்க வீட்டுவாசலில் வந்து கூட்டணிக்காக நின்னீங்க? விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால், பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் இருக்காங்க" என்றார்... இப்படி பேசியதற்காக பெற்ற பிள்ளையை அவர்கள் வீட்டில் கண்டித்தார்களா இல்லையா என்று கூட நமக்கு தெரியாது.

 நாகரீகம்

நாகரீகம்

இளம் ரத்தம் சூடேறி பேசுகிறார் என்றுகூட இதை எடுத்துகொண்டாலும், பெரியவர்களை நாகரீகமாக விமர்சிக்கும் மனோபாவம் அவருக்கு வர வேண்டும்.. அதனால்தான் ஒருமுறை ராஜேந்திர பாலாஜி, "சின்ன பையனை பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார் விஜயகாந்த்" என்று டென்ஷன் ஆகி சொன்னார்.. இதெல்லாம்தான் இன்று அதிமுக தேமுதிகவை கடைசி வரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட காரணமாக அமைந்துவிட்டது என்றே கருதலாம்.

பிரேமலதா

பிரேமலதா

இனியாவது, இதுபோன்றவைகளை களைந்துவிட்டு, தேமுதிக ஆக்கப்பூர்வமான பணிகளில் இறங்க வேண்டும்.. மறுடிபயும் அந்த கட்சி விஸ்வரூபம் எடுக்க வேண்டி உள்ளது.. அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.. அது.. விஜயகாந்த் ஸ்டைலுக்கு மொத்தமாக மாறுவதுதான்.. கிராமம் கிராமமாக பிரேமலதா, விஜயகாந்த் மகன் ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.. வெட்டிப் பேச்சு, வீண் ஜம்பம் கூடவே கூடாது. விஜயகாந்த் போல மக்கள் மனதைக் கவரும் வகையில் மக்களோடு மக்களாக மாற வேண்டும்

 மக்கள் பிரச்சனை

மக்கள் பிரச்சனை

இனியாவது மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுக்க வேண்டும்.. நீட் முதல் தூத்துக்குடி வரை எல்லா மக்கள் பிரச்சினையிலும் மக்களுக்கு ஆதரவாக மாற வேண்டும்... மது விலக்கை கையில் எடுக்க வேண்டும். பூரண மது விலக்குக்காக குரல் கொடுக்க வேண்டும்.. விவசாயிகளுக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும் .. இப்படி மொத்தமாக மாறி தேவையில்லாத வீண் பேச்சுக்களையும் குறைத்துக் கொண்டால் மட்டுமே இழந்த செல்வாக்கை மறுபடியும் பெற முடியும்... அப்படி இல்லாமல் அணி மாறி மாறி போட்டியிட்டால் இருப்பதும் நாசமாகும்... ஏனென்றால், அவர்களின் முக்கிய துருப்பு சீட்டே விஜயகாந்த்தான்.

 கண்டிப்பு

கண்டிப்பு

அதுமட்டுமல்ல, அரசியலையும் தாண்டி எல்லா தலைவராலும் நேசிக்கப்படுபவர் விஜயகாந்த்.. அவ்வளவு ஏன், விஜயபிரபாகரன் பிறப்பதற்கு முன்பே விஜயகாந்த்தை உயர்த்தி ஆளாக்கி பூரித்து பார்த்து மகிழ்ந்த தமிழகம் இது... இவர்களில் யார் என்ன தப்பு செய்தாலும் ஒவ்வொரு முறையும் உருளுவது என்னவோ விஜயகாந்த் தலைதான்... அதனால், விஜயகாந்த்துக்கு எதிரானவர்கள் கண்டிப்பாக வெளியில் இல்லை.. வீட்டிற்கு உள்ளேயேதான் இருக்கிறார்கள்.. இது இனியாகிலும் மாற வேண்டும்!

 
 
 
English summary
What does Vijayakanths DMDK have to do now
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X