எடப்பாடியின் அடுத்த டார்கெட்.. “ஒரே அடியில் மூணும் காலி” வேட்டு வைக்க பரபர ஆலோசனை.. ஆடிப்போன ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிமன்றம் வாயிலாக தொடர்ச்சியாக செக் வைத்து வரும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை ஒரு வலுவான அஸ்திரத்தை கையில் எடுக்க இருக்கிறார்.

ஜூன் 23ஆம் தேதிக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான விளைவுகளே ஏற்படவில்லை. எனினும் விடாமல் போராடி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் எந்த உரிமையும் இல்லை என நிரூபிப்பதற்காக சட்ட வல்லுநர்களுடன் அதிதீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 இருதரப்பு மோதல்

இருதரப்பு மோதல்

ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கினார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியை விட்டு கூண்டோடு நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தனது ஆதரவாளர்களை கட்சியின் புதிய நிர்வாகிகளாக நியமித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வமும் ஈபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை பொறுப்பில் நியமித்து வருகிறார்.

தற்போதைய சூழ்நிலையில்

தற்போதைய சூழ்நிலையில்

கடந்த ஜூலை 11ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுள்ளது. அதுபோல அ.தி.மு.க கட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வரவு-செலவு செய்வதற்கான வங்கி கணக்குகளை இயக்கும் அதிகாரமும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே கிடைத்துள்ளது. தொடர்ந்து நீதிமன்றங்களில் ஈபிஎஸ் தரப்புக்கே சாதகமான முடிவுகள் கிடைத்து வருவதால் ஓபிஎஸ் தரப்பினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

போட்டி அதிமுக

போட்டி அதிமுக

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முக்கிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். கட்சியின் தலைமை அலுவலகம் ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் முடிவில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. அதேநேரம், தனது ஆதரவாளர்களோடு ஆலோசிக்கவும், கட்சி அலுவல்களை கவனிக்கவும் ஒரு அலுவலகத்தையும் பார்த்து வருகிறாராம் ஓபிஎஸ். அங்கிருந்தபடி, தான் நியமித்த பொறுப்பாளர்களைக் கொண்டு போட்டி அதிமுகவை நடத்த ஓபிஎஸ் தயாராகி வருகிறாராம்.

பதிலடி

பதிலடி

ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் பதிலடி கொடுப்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் சளைக்காமல் செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பை முழுமையாக ஆஃப் செய்வது எப்படி என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடனும், சட்ட வல்லுநர்கள் உடனும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பெரும்பான்மையானோர் தனக்கு ஆதரவாக இருப்பதால் எந்த எல்லை வரையும் சென்று மோதிப் பார்த்துவிடலாம் என முடிவெடுத்து விட்டார் ஈபிஎஸ்.

மீண்டும் கோர்ட்

மீண்டும் கோர்ட்

அதேநேரம், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகாது என்றும் தேர்தல் ஆணையத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார். அதேசமயம், கட்சியின் அதிகாரப்பூர்வ அமைப்பான பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஆணையத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்.

ஓபிஎஸ்ஸுக்கு செக்

ஓபிஎஸ்ஸுக்கு செக்

இந்நிலையில், அதிமுக கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தை நாட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வழக்கு தொடரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடியை பயன்படுத்த தடை

கொடியை பயன்படுத்த தடை

பொதுக்குழுவால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டே நீக்கியுள்ளதால், அவர்கள் அதிகாரப்பூர்வமாக கட்சியின் எந்த நடவடிக்கையிலும் கலந்து கொள்ள முடியாது. எனவே, கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவைப் பெற கோர்ட்டை நாட முடிவெடுத்துள்ளனர்.

ஆடிப்போன ஓபிஎஸ் டீம்

ஆடிப்போன ஓபிஎஸ் டீம்

எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இந்த அதிரடி நடவடிக்கையை கேள்விப்பட்டு ஓபிஎஸ் தரப்பு ஆடிப்போயிருக்கிறதாம். முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளைப் போல இதுவும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக வந்தால் 'போட்டி அதிமுக' எனும் தனது திட்டம் தோல்வியடையக்கூடும், அதிமுக பெயர், கொடி, சின்னம் என எதையுமே பயன்படுத்த முடியாது என்பதால், ஈபிஎஸ் தரப்பின் திட்டத்தை முறியடிப்பதற்காக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+