மங்கிபாக்ஸ் பரவ பாலியல் உறவு முக்கிய காரணமாம்... எச்சரிக்கும் ஆய்வு...கவனம் மக்களே!
ஆணுடன் ஆண் உடலுறவு கொள்பவர்களிடையே மங்கிபாக்ஸ் தொற்று அதிகம் பரவியிருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: மங்கி பாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு பாலியல் உறவால்தான் தொற்று பரவியிருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது. மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துள்ளனர்.
Recommended Video
1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970 ஆம் ஆண்டு காங்கோவில் பரவியது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் 'மங்கி பாக்ஸ்' என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் பாக்ஸ்வைரிடே குடும்பத்தில் உள்ள ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.
மே மாத தொடக்கத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 10க்கும் அதிகமானோருக்கு மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாலியல் உறவால் இந்த வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் 40க்கும் அதிகமானோருக்கு மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கனடாவிலும் 12க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலும் மே 6ஆம் தேதியிலிருந்து இதுவரை 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

மங்கி பாக்ஸ் பரவ காரணம்
அமெரிக்காவிலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. WHO உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் சோஸ் ஃபால், ஆணுடன் ஆண் உடலுறவு கொள்பவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதை நாம் காணமுடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் என்னென்ன
மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று முதலில் காய்ச்சல், தசை வலி மற்றும் கணுக்கால் வீக்கம் என ஆரம்பித்து பின்னரே முகம் மற்றும் உடலில் சிக்கன்பாக்ஸ் போன்று தடிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நோய் வந்தால் காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

எத்தனை நாட்கள் சிகிக்சை
குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்நோய் ஏற்படும் 10 ல் ஒருவருக்கு இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மத்தியிலேயே உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்ப அறிகுறி ஃப்ளூ காய்ச்சல் போன்றே இருக்கும். நெறி கட்டுதலும், முகத்திலும் உடலிலும் ஏற்படும் தடிப்புகளும் இந்த நோயின் முக்கிய அறிகுறி.

ஆணுடன் ஆண் பாலியல் உறவு
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு பாலியல் உறவால்தான் தொற்று பரவியிருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறையும், ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்பவர்களிடையே மங்கிபாக்ஸ் தொற்று அதிகம் பரவியிருப்பதை உறுதிசெய்திருக்கிறது.

தன்பாலின சேர்க்கை
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகளின் தரவுப்படி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும், இருபாலின சேர்க்கை பழக்கமுடையவர்களிடையே இந்த நோய் தொற்று அதிகம் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் இந்த வார துவக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

உயிரிழப்பு
மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துள்ளனர். அதில் மிகச்சிலரே அரிதாக உயிரிழந்தனர். அதேசமயம் ஐரோப்பிய மற்றும் வட ஆப்ரிக்காவில் இது இன்னும் அரிதாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications