பலவீனத்தையே பலமாக மாற்றி சாதித்த சச்சின் எங்கே? ஒரே மாதிரி பந்தில் ஓயாமல் அவுட்டாகும் கோலி எங்கே?
சென்னை: விராட் கோலிக்கு அப்படி என்னதான் பிரச்னை? "சதம் எல்லாம், சாமி வதம் செய்வது போல" என வலம் வந்தவருக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைதான் என்ன?
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இந்தியா வென்ற பின், சச்சினை தோளில் தூக்கிக் கொண்டு இந்திய அணி வீரர்கள் மைதானத்தை சுற்றிக்கொண்டு ஆரவாரத்துடன் வருவார்கள். அதில் சச்சினை தூக்கிய தோளிகளில் ஒன்று மட்டும் மாறாமல் கடைசி வரை நடந்து வரும். இறுதியாக சச்சினை இறக்கிவிட்டு, அந்த வீரர் பேசும் வார்த்தைகள் தான் இவை:
"24 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தோளில் சுமந்தவரை இப்போது நாங்கள் சுமந்துள்ளோம்.." அந்த வீரரின் பெயர் விராட் கோலி.
இதில் சச்சின் விட்டுச்செல்லும் இடத்திற்கு தான் வருவதையும் விராட் கோலி மறைமுகமாக உலக கிரிக்கெட்டுக்கு அறிவிப்பார் என்று பொருள் எடுத்த விமர்சகர்களும் உண்டு. அன்றில் இருந்து 2019 வரை விராட் கோலி தொட்டதெல்லாம் தங்கம் தான்.

புயலே உருவானது
சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டினார். இவ்வளவு ஏன், கிரிக்கெட்டில் சச்சினே செய்ய முடியாத சாதனைகளை விராட் கோலி படைப்பார் என்று ஆஸ்திரேலிய மீடியாக்களும் புகழாரம் சூட்டின. சொந்த மண்ணிலும் சரி, வெளிநாட்டு மண்ணிலும் மைதானத்தில் விராட் கோலி இருந்தால் அங்கு அவர் தான் ஹீரோ. கேஜிஎஃப் பட பாணியில் சொன்னால் இன்னும் கூட பொறுத்தமாக இருக்கும். ' அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார்.. அவர் கத்தி வீசின வேகத்துல ஒரு புயலே உருவாகிருச்சு'. ஆம், விராட் கோலி பேட்டை சுழற்றினால், இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாத நிலை.

பரிதாப நிலை
ஆனால் அதே விராட் கோலிக்கு, இன்று பக்கத்து நாட்டு வீரர்கள் எல்லாம் ஆறுதல் கூறும் நிலை. இதுவும் கடந்து போகும் என்று ரசிகர்கள் காத்திருந்து இரண்டே முக்கால் ஆண்டுகள் கழிந்துவிட்டது. அப்படி விராட் கோலிக்கு என்ன தான் பிரச்னை? பிடிவாதம் தான் ஒரே பிரச்சினை. தான் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கிறோம் என்பதெல்லாம் மாயை தான் என்று விராட் கோலி இன்னும் நம்புகிறார். 4வது மற்றும் 5வது ஸ்டம்புகளில் வீசப்படும் பந்துகள் தனக்கு ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று இன்னும் நம்பிக்கையாக விளையாடுகிறார். அந்த ஈகோ தான் விராட் கோலிக்கு இப்போது எமனாக நிற்கிறது.

கவர் டிரைவ் அடிக்காத சச்சின்
2004ல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் சச்சின் மிகமுக்கிய வீரர். ஆனால் அந்த டெஸ்ட் தொடரில், சச்சின் கவர் ட்ரைவ் அடித்தாலே ஆட்டமிழந்த சம்பவங்கள் சொல்லி வைத்தாற் போல் நிகழ்ந்தது. ஒரு முறை, இரண்டு முறை அல்ல, 7 முறை இதுபோல் நிகழ்ந்தது. சச்சின் தனது யுக்தியை மாற்றினார். கவர் ட்ரைவ் ஆட மாட்டேன் என்று வீம்பாக நின்று வெறும் சதம் மட்டுமல்ல, இரட்டை சதத்தை விளாசினார் (241 ரன்கள்). அங்கே சச்சினுக்கு தனது ஈகோவை கீழே வைத்துவிட்டு, அணியின் நலனே முக்கியம் என்று நிற்க முடிந்தது.

குதிரை மாதிரி ஓடனும்
ஆனால் விராட் கோலியால் அதை செய்ய முடியவில்லை. அவர் கொஞ்சம் கூட தனது ஆட்டத்தின் பொஷிஷனை மாற்றி ஆட விரும்பவில்லை. முதுகுவலி, டென்னிஸ் எல்போ பிரச்சினைகள் வந்தபோது சச்சின் அதற்கேற்ப ஆட்டத்தின் பொஷிஷனை மாற்றினார். அதாவது, சற்று குனிந்து நின்று ஆடுவது, பவர்ஃபுல் ஷாட்டுகளை தவிர்த்து பந்தை வழிகாட்டி விட்டே பவுண்டரிக்கு விரட்டுவது என வித்தை காட்டினார் லிட்டில் மாஸ்டர். சதங்களை விளாசினார். ஆனால் கோலி எதற்கும் தயார் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களுக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் என்பது ஒரு பொருட்டே அல்ல. சச்சின், டிராவிட், பாண்டிங், லாரா என்று எல்லோருக்கும் இந்த பிரச்னை வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கும் விராட் கோலிக்கும் இருக்கும் வித்தியாசம் ஒன்று தான். அவர்கள் எல்லாம் ஓடி விழுந்த பின், குதிரை போல் எழுந்து மீண்டும் ஓடினார்கள். ஆனால் விராட் கோலி விழுந்த இடத்திலேயே இன்னும் படுத்து கிடக்கிறார். ஏன் விராட் கோலியின் ஃபார்ம் பற்றி அனைத்து மீடியாக்களும் திடீரென பேசத் தொடங்கியுள்ளது என்ற சந்தேகம் அனைவருக்கும் வரலாம்.

இளைஞர்கள்
அதற்கு காரணம், எதிர் வரும் டி20 உலகக்கோப்பைத் தொடர் தான். விராட் கோலியின் இடத்திற்காக சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ், தீபக் ஹூடா என்று பெரும் இளம் வீரர்களின் பட்டாளமே காத்திருக்கிறது. விராட் கோலிக்காக இவர்களை எல்லாம் பயன்படுத்தாமல் இருக்கப் போகிறோமா அல்லது விராட் கோலியை கடந்துவிட்டு இந்திய அணி முன்னேறிப் போகப் போகிறதா என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் ஆசியக் கோப்பைத் தொடரில் பதில் கிடைத்துவிடும்..!
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications