Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பவே என்கிட்ட சொன்னாங்க.. ஜனவரியில் நடந்தது என்ன? மீனாவின் கணவர் பற்றி ராதாகிருஷ்ணன் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம் பற்றி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    Meena Husband பற்றி Radhakrishnan பேட்டி | *TamilNadu

    நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு மரணம் அடைந்தார். இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சமீபத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இவரின் இரண்டு நுரையீரலும் சமீபத்தில் செயல் இழக்கும் நிலைக்கு சென்றது.

    பெங்களூர்

    பெங்களூர்

    அப்போது இரண்டு நுரையீரலுக்கும் மாற்று தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதையடுத்து இவருக்கு மாற்று நுரையீரல் ஏற்பாடு மீனாவின் குடும்பம் காத்து இருந்தது. ஆனால் டோனர் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கு இடையில் அவரின் உடல் நலிவடைந்த நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர்.இவரின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    ராதாகிருஷ்ணன்

    ராதாகிருஷ்ணன்

    இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போது கூட்டுறவுத்துறை செயலாளராக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். இவர் பெங்களூரை பூர்வமாக கொண்டவர். மீனாவின் கணவர் வித்யாசாகரின் குடும்பமும் பெங்களூரை சேர்ந்தது. மீனாவின் குடும்பமும், ராதாகிருஷ்ணன் குடும்பமும் நட்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மீனாவின் கணவர் மரணம் பற்றி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்க கூடிய நபர் நடிகை மீனா.

    சிகிச்சை

    சிகிச்சை

    அவரின் கணவர் இயற்கை எய்திவிட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். நான் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த போது கூட, தனது கணவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மீனா கூறி வந்தார். தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அவரின் கணவருக்கு ஜனவரியில் இருந்தே உடல்நிலை பாதிப்பு கூடுதலாக இருந்தது. ஜனவரியில் உடல்நிலை மோசமாக தொடங்கியது.

     ஷாக்கிங் செய்தி

    ஷாக்கிங் செய்தி

    எதிர்பாராமல் நேற்று ஷாக்கிங்காக அவர் இறந்துவிட்டார். இது மிகவும் வருத்தமான செய்தி. மிகவும் ஷாக்கிங்கான செய்தி என்றுதான் கூறவேண்டும். பெசன்ட் நகரில் 2.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு என்ன உதவி வேண்டுமோ அதை மாநகராட்சி மூலம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+