ஆட்டத்தை தொடங்கிய பைபர்ஜாய் புயல்.. சென்னையில் ட்விஸ்ட் அடிக்கும் வானிலை.. வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: இன்று சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ளது பைபர்ஜாய் புயல். இந்த பைபர் ஜாய் புயல்.. தற்போது தீவிர புயலாக உள்ளது. இந்த புயல் வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. குஜராத்தில் இந்த புயல் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 6 மணி நேரத்தில் இந்த புயல் வேகமாக வலிமை அடையும். அதன்பின் இது அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது. தற்போது இந்த புயல் மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் இப்போதைக்கு இது கரையை கடைக்காது.
வரும் 15ம் தேதி பாகிஸ்தான், கட்ச் கடற்கரை அருகே இது கரையை கடக்கும். அதற்கு முன் குஜராத்தில் தீவிரமான மழையை இது கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைபர்ஜாய் புயல் தென்இந்திய கடல் பகுதிகளுக்கு அருகே வர வாய்ப்பு இல்லை. அரபிக்கடலில் தீவிர புயலாக இருக்கும் பைபர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக வாய்ப்பு உள்ளது.
சென்னை ரெயின்ஸ்; இந்த நிலையில் இன்று சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் நிலவும். அதே சமயம் இன்றும் நாளையும் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான நல்ல சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மழைக்காலம் இன்னும் வலிமை ஆகவில்லை.
தீபகற்ப பகுதிகளில் மழை காலத்திற்கான சூழ்நிலை வலிமை இன்றி காணப்படுகிறது. இருந்தாலும் வட தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இந்த பைபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக மாறும். 2019ல் உருவான வாயு புயல் போலவே இதுவும் இருக்கும். வாயு புயல் முறையாக கரையை கடக்கவில்லை. இந்த பைபர்ஜாய் புயல் குஜராத் கடலோர பகுதிகளில் மழையை கொடுக்கும், என்று சென்னை ரெயின்ஸ் கூறியுள்ளது .
வலிமை அடைகிறது: பைபர்ஜாய் புயல் தற்போது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.

அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
அதேபோல் மூன்றாவது விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இந்த மூன்று விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். அரபிக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் பைபர்ஜாய் புயலுக்கு சாதகமாக உள்ளது. அதனால் இந்த புயல் வலிமை அடைந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications