சூரிய கிரகணத்தை “மிஸ்” பண்ணிட்டீங்களா.. 10 வருசம் “வெயிட்” பண்ணனும்! இந்தியாவில் அடுத்து எப்போது?
சென்னை: இன்று மாலை சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில் இந்தியாவில் அடுத்த முறை சூரிய கிரகணம் எப்போது நிகழும் என்பதை பார்க்கலாம்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தென்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை மேற்கு வங்கத்துக்கு அப்பால் உள்ள அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரகணம்
இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கியது. மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளித்தனர். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தென்பட்ட இந்த கிரகணத்தை, அதிகபட்சமாக குஜராத் மாநிலம் துவாரகாவில் பார்க்க முடிந்தது.

முக்கிய நகரங்கள்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்பட்டது. தென்னிந்திய நகரங்களான சென்னை, கோவை, ஊட்டி, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய தென் இந்திய நகரங்களில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டது.

தவறிய மக்கள்
தொலைநோக்கிகள் உதவியுடன் இதனை பொதுமக்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாதாரண கண்களில் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். தொலைநோக்கி வசதி இல்லாத நகரங்களில் வசித்த மக்கள் இதனை காண தவறினர். இந்த நிலையில் அடுத்த முறை எப்போது சூரிய கிரகணம் நிகழும் என்ற பட்டியலை பார்ப்போம்.

அடுத்த கிரகணங்கள்
அடுத்த நவம்பர் மாதம் முழு சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5 ஆண்டுகள் கழித்து 2027 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி அடுத்த சூரிய கிரகணம் நிகழும். 2031 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியும், அதை தொடர்ந்து 2034 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று சூரிய கிரகணம் ஏற்படும். இதில் 2031 ஆம் ஆண்டு ஏற்படும் சூரிய கிரகணத்தையே இந்தியாவில் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications