சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    லேட்டஸ்டாக ரெடியாகும் ரஜினி..விரைவில் பிகேவுடன் அக்ரிமென்ட் | Rajnikanth met Prashanth Kishore

    சென்னை: இதுவரை அரசியலுக்கு வரலாமா வேணாமான்னுதான் ரஜினி டவுட்டில் இருந்தார், விவாதமும் செய்து வந்தார். இது போன வருடம் வரைக்கும் தொடர்ந்தது. பலரிடமும் விவாதம் செய்வார். பெரும்பாலும் அவை டிஸ்கஷன்லேயே போய் விடும். இப்ப விவாதம் என்னன்னா அரசியலுக்கு வருவது என்ற முடிவுக்கு வந்து விட்டார். ஆனால் எப்போது வருவது என்பது தொடர்பாக விவாதம்தான் நடக்கிறதாம்.

    தை பொங்கல், ஏப்ரல் 14 என இரு தேதிகளை விவாதித்து வருகின்றனர். இதில் சிலர் தை பொங்கல் ஓகே என்று சொல்லியுள்ளனர். சிலர் ஏப்ரல் 14க்கு ஓகே சொல்லியுள்ளனர்.

    ஏப்ரல் என்றால் ரொம்ப லேட்டாகி விடும். ஏற்கனவே ரொம்ப கேலி செய்கிறார்கள். இதை இன்னும் ஓட்டுவார்கள் என்று அந்தத் தரப்பு கூறுகிறது. தைப் பொங்கல்தான் சரியானது. அதிரடியாக இருக்கும். அதையே தேர்வு செய்யலாம் என்று சொல்லியுள்ளனர்.

    ஏப்ரல்

    ஏப்ரல்

    ஆனால் ஏப்ரலுக்கு ஆதரவாக உள்ளோர் என்டிஆர் ஸ்டைல்தான் உங்களுக்கு சரிப்படும். என்டிஆர் தேர்லுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தார். சட்டுப்புட்டென்று ஆட்சியைப் பிடித்தார். அதுபோல ஏப்ரலில் ஆரம்பித்து தேர்தலை சந்திப்பதுதான் சரியாக இருக்கும். நீங்க என்ன செய்தாலும் அது சோசியல் மீடியாவில் அதிகமாக விவாதிக்கப்படும். அதேசமயம், ஹைப் 2 மாதத்தில் இறங்கி விடும். கலைஞர் இறந்தபோது இளைஞர்கள் நிறைய திமுக பக்கம் போனார்கள். பரபரப்பு இருந்தது. ஆனால் அது பின்னர் அடங்கி விட்டது. தேர்தலின்போது எல்லோரும் சீமான், கமல் பின்னால் போய் விட்டார்கள். தமிழக மக்கள் யாரையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட மாட்டார்கள்.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல அதிரடியாக செயல்படுவதே பாதுகாப்பானது. எப்படியும் 2021 மே மாதம்தான் தேர்தல் வரும். அப்படியே ஆட்சியைக் கலைத்தாலும் கூட ரொம்ப முன்கூட்டியே வர வாய்ப்பே இல்லை. எப்டிப் பார்த்தாலும் ஒன்றரை வருஷம் கட்சி தாக்குப் பிடித்தாக வேண்டும். நிறைய வேலை இருக்கு. நிர்வாகிகளைப் போட வேண்டும். இதுதொடர்பாக சர்ச்சைகள், கோஷ்டிப் பூசல்கள், சண்டைகள் வரும். போர்க்கொடி பஞ்சாயத்து வரும். நீங்க எது செஞ்சாலும் ஜனங்க பேசுவாங்க. எது நடந்தாலும் செய்தியாகும். எனவே ஜனவரி என்றால் தேவையில்லாமல் நாமே வேலியில் போன ஓணானை தூக்கி வேட்டிக்குள் விட்ட கதையாாகி சிக்கலாகி விடும்.

    சாதகம்

    சாதகம்

    இதுதொடர்பாக ஜோசியர் ஒருவரிடமும் ஆலோசனை நடந்துள்ளது. அவர் சித்திரை ஓகே என்று கூறியுள்ளார். அந்த சமயத்தில்தான் ஏதோ நீச பந்த ராஜயோகம் வருதாம். அது ரஜினிக்கு சாதகமானதாம். எனவே ஏப்ரலே பெஸ்ட் என்று கூறியுள்ளாராம். ரஜினிக்கும் ஏப்ரல் ஓகே என்றே தோன்றுகிறதாம்.

    உறுதியா?

    உறுதியா?

    மறுபக்கம் பிரஷாந்த் கிஷோர் டீமும் அசைன்மென்ட் கேட்டு பேசி வருகின்றனராம். இதுவரை அவர்களுக்கு ரஜினி எஸ் நோ சொல்லவில்லையாம். ஆலோசனை அளவில்தான் எல்லாமே உள்ளதாம். எனவே இதுவும் இன்னும் உறுதியாகாமல் உள்ளதாம்.

    முக அழகிரி

    முக அழகிரி


    இன்னொரு பக்கம்.. ரஜினி வித்தியாசமான அரசியலுக்கு திட்டமிட்டுள்ளாராம். அதாவது அடிமட்டத்திலிரு்நது இவர் கட்சியை உருவாக்கும் திட்டம் இல்லையாம். ஏரியாவுக்கு ஏரியா பலமானவர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களிடம் கட்சியை உருவாக்கும் பணியை ஒப்படைக்கப் போகிறார்கள். அதாவது கராத்தே தியாகராஜன், சைதை துரைசாமி, மதுரை என்றால் மு.க.அழகிரி என்று தேர்வு செய்யப் போகிறார்கள். அவர்கள்தான் கட்சியை அடிமட்டத்திலிருந்து உருவாக்குவார்களாம்.

    கிட்டத்தட்ட சினிமா படம் எடுப்பது போல. அதாவது நல்ல நல்லடெக்னீஷியன்களைத் தேர்வு செய்து படத்தை எடுப்பார்கள் இல்லையா அது போல.

    English summary
    Though actor Rajinikanth is sure to start a political party, there is a debate on when to start his new party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X