சீனுக்கு வந்த கேடி ராகவன் வீடியோ.. மலர்க்கொடி விசாரணை என்னாச்சு? நேரம் பார்த்து இழுத்த ராஜீவ் காந்தி
சென்னை: பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா, பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ள நிலையில், கே.டி.ராகவன் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மலர்க்கொடி விசாரணை அறிக்கை என்ன ஆனது என திமுக மாநில செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்துடன் பாலியல் குற்றச்சாட்டை கடந்த ஆண்டு சுமத்தி அதிர வைத்தார் அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் மதன் ரவிச்சந்திரன்.
இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பாஜக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்கப்பட்டது.

அண்ணாமலை அறிக்கை
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அப்போது அவர் விரிவான அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார். அதில் வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் உள்நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், பாஜகவில் பொறுப்பில் உள்ள பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அண்ணாமலை கூறி இருந்தார்.

மலர்க்கொடி ஆணையம்
அதில், "கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் திருமதி. மலர்கொடி அவர்கள் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து, சாட்டப்படும் குற்றங்களில், வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

சூர்யா சிவா பேச்சு
இந்த நிலையில் இன்று பாஜகவில் கடந்த மே மாதம் இணைந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஓபிசி பிரிவு மாநில தலைவருமான சூர்யா சிவா, பாஜக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டும் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை
தனியார் ஊடகத்தில் வெளியான அந்த வீடியோ ஸ்க்ரீன்ஷாட்டை பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரியும் பகிர்ந்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு
நீக்கப்படுகிறார்." என அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

விசாரிக்க உத்தரவு
அதேபோல் சூர்யா சிவா மீதும் விசாரணை மேற்கொள்ள அண்ணாமலை குழு அமைத்து உள்ளார். டெய்சி சரண், சூர்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடலை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் பாஜக மாநில துணைத் தலைவர் கனக சபாபதிக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ராஜீவ் காந்தி
ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக மாநில செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் ராஜீவ் காந்தி, "திருச்சி சூர்யாவின் அநாகரீகமான செயலினை ஊடகங்களில் இருந்து திசை திருப்பி பேசும் பொருளாக மாறாமல் இருக்க காயத்ரி ரகுராமை பாஜகவில் இருந்து நீங்கி உள்ளார் அண்ணாமலை!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

கே.டி.ராகவன்
மற்றொரு பதிவில், "கே.டி.ராகவன் விவகாரத்தில் அமைக்கப்பட்ட பாஜக மாநில செயலாளர் மலர்க்கொடி அறிக்கை என்ன ஆனது? திரு அண்ணாமலை. விசாரனை அறிக்கையில் அண்ணாமலையும் மதன் ரவிச்சந்திரனும் கூட்டு என தெரியவரும் என்றா? என ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications