"குறி" இவரா?.. பட்டென மாறும் "கிளைமேட்".. எகிறி அடிக்கும் திமுக.. குறுக்கே வரும் பாஜக.. அடுத்து என்ன
திமுக அமைச்சர்கள் ஊழல் லிஸ்ட்டை அறிவிக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சென்னை: மாஜிக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீவிரமாகி வருகிறது.. இதையடுத்து, யார் அடுத்த நபர் என்ற கலக்கம் அதிமுகவில் சூழ்ந்து வருகிறது.
Recommended Video
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் மாஜிக்கள் கட்டம் கட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கலங்கி போய் உள்ளனர்..
இப்போது, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சிக்கி உள்ளார்.. வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாக, அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கர்
இதற்கு முன்பும், இப்படித்தான், முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.. அந்த சோதனைகளில், கணக்கில் வராத கோடிக்கணக்கில் ரூபாய் பணம் மற்றும் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது... அதாவது, இதுவரை 6 மாஜிக்களிடம் சோதனை நடந்து முடிந்துள்ளது..

அமைச்சரவை
இந்த 6 பேரும், மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது நடந்து முடிந்த ரெய்டுகளின் மூலம் தெரியவந்துள்ளதாம். இன்னும் காமராஜ் கணக்கு இதில் சேரவில்லை. இந்த 7 பேருமே அமைச்சரவை வரிசையில் பிரதான இடத்தை பிடித்தவர்கள்.. ராஜேந்திரபாலாஜி மீது தனி கேஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.. ஆனால், ஆவின் முறைகேடு விரைவில் விஸ்வரூபமெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. அதற்கான, சரியான ஆதாரங்களை சேகரிக்கும் வேலையும் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் மும்முரமாகி உள்ளனர்..

2 பேர் யார்?
இதில், டாப்பில் உள்ள 2 பேரிடம் மட்டும், திமுக இன்னும் நேரடியாக நெருங்கவில்லை.. ஆனால், கலக்கத்தை இவர்களிடம் எப்போதோ உண்டு பண்ணி விட்டது. இந்த இருவரில் ஒருவர், மறைமுகமான ஆதரவிலும், இணக்கத்திலும் திமுகவை சரிக்கட்டி வருவதாக தெரிகிறது. அதனால், மிச்சமுள்ள அந்த ஒரு நபருக்கு சிக்கல் கூடலாம் என்கிறார்கள்..

ஊழல் புத்தகம்
திமுக அரசு இப்படி அதிமுக தலைவர்களுக்கு செக் வைத்து வருகிறது என்றால், திமுகவுக்கே செக் வைக்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறதாம்.. சில தினங்களுக்கு முன்பு மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, "திமுக அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை மதுரையில் வெளியிட உள்ளோம். திமுக தலைமையிலான அரசு மக்களை சுரண்டி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆளுநரிடம் 700 பக்க திமுக ஊழல் குறித்த புத்தகம் வழங்க போகிறோம்" என்று கூறியிருந்தார்.

யார் அந்த அமைச்சர்
இதுபோக, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மாதந்தோறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.. கடந்த ஜுன் மாதம் அண்ணாமலை இவ்வாறு சொல்லியிருந்த நிலையில், இந்த மாதம் எந்த அமைச்சர் பெயரை அவர் வெளியிட போகிறார் என்ற கலக்கம் திமுகவில் தற்போது சூழ்ந்து வருகிறது.. ஆக, அதிமுகவை சிக்க வைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்தால், திமுகவுக்கே செக் வைக்க பாஜக முனைப்பு காட்டி வருவதால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது..!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications