10 கோடியில் சொகுசு வீடு.. 70 கோடியில் கார்கள்.. உலக பணக்கார்களை மிஞ்சும் சுகேஷின் சொகுசு வாழ்க்கை
சென்னை: இரட்டை இலை சின்னம் வழக்கில் லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள சந்திரசேகர் உலகின் பெரும் பணக்காரர்களை மிஞ்சும் வகையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .
இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தரப்பில் 50 கோடி வரை பேரம் பேசி இரண்டு கோடி பணத்தை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெறும்போது டெல்லி போலீசாரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளிலிருந்து சுகேஷ் சந்திர சேகரின் வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததும் , பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் அன்பளிப்பாக பெற்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிபிஐ அதிகாரிகள்
அப்போது அவர் மத்திய அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய பதவிகள் வாங்கித் தருவது சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் செய்து தருவதாகக் கூறி சிறையில் இருந்தபடியே செல்போனில் பேசி தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் 200 கோடி வரை லஞ்சம் பெற்று அன்பளிப்புகள் பெற்றதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சொகுசு கார்கள்
அன்பளிப்பு மூலம் பெறப்பட்ட சொகுசு கார்கள் சென்னை கானத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை கானத்தூர் சினேகா கார்டனில் உள்ள சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது . இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள மகாராஷ்டிரா , மத்திய பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு என பல்வேறு மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் சினிமா சூட்டிங்கில் பயன்படுத்தப்படும் நவீன கேரவன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ரோல்ஸ் ராய்ஸ் கார்
மேலும் அவரது வீட்டில் இருந்து வழக்கு தொடர்பான விவரங்கள் முக்கிய தகவல்களை வைத்து இருந்த லேப்டாப் கணக்கில் வராத 82 லட்சம் ரொக்கப் பணம் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . சோதனை நடத்தி அதிகாரிகள் கட்டிடத்தின் பிரம்மாண்டம் , கட்டுக்கட்டாக பணம், நகை ஆவணங்கள் பல கோடி சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்பதை பார்த்து மிரண்டு போய் உள்ளார்கள் . உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவர் கூட இவ்வளவு ஆடம்பரத்துடன் இருந்திருப்பார்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு சுகேஷ் சந்திரசேகரின் சொகுசு வாழ்க்கை இருந்ததாக கூறப்படுகிறது . அதிலும் சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் கிடைக்கும். ஆனா அந்தக் காரையும் சுகேஷ் சந்திரசேகர் எப்படி வாங்கினார் என்று தெரியவில்லை. அந்த காரின் விலை 10.45 கோடியாகும். அவர் வைத்துள்ள லம்போகினி கார் 3.15 கோடி . இதேபோல் பல்வேறு சொகுசு கார்களை வைத்துள்ளார்.

பார் ஜிம்கள்
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் பண்ணை வீட்டின் மதிப்பு 10 கோடி என்று சொல்லப்படுகிறது. நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் பல பலக்கும் கண்ணாடிகள் மனதை மயக்கும் இத்தாலிய பளிங்கு கற்கள் , திறந்த வெளி பார்கள், ஜிம் மாஸ்டர் படுக்கை அறை, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர்கள் அலங்கார கலைப் பொருட்கள், விலை உயர்ந்த வெளிநாட்டு ஆடை அணிகலன்கள் , விளையாட்டு அரங்கம் என் பிரம்மாண்டமாக இருந்துள்ளது.

எப்படி சம்பாதித்தார்
சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சிவாஜி 70 கோடி மதிப்புள்ள கார்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எப்படி வந்தன ? அவர் எப்படி இவ்வளவு சம்பாதித்தார் ! இதற்கெல்லாம் சரியாக கணக்கு இருக்கிறதா? அனைத்தும் யார் பெயரில் உள்ளன என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கு விடை தெரிவதற்காக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications