சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸி. அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் ஏன் தேவை? ஆஸி. தோல்விக்கு காரணமான அந்த ஒரு முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி அடைந்த தோல்விக்கு, ஸ்டீவ் ஸ்மித் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்களின் தேவையையும் பற்றி பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட் என்பதே முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கம் என்றும், புத்திசாலியான பந்துவீச்சாளர்களுக்கானது ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. இமாலய சிக்சர்களும், வேகமான பவுண்டரிகள் அடிக்கும் பேட்ஸ்மேன்களின் தேவை அதிகமாக இருந்தாலும், டி20 போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு சூழலுக்கு ஏற்றவாறு திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் வெறும் பவுண்டரி, சிக்சர் அடித்தால் போதும் என்று நினைத்தால், அந்த அணி நிச்சயம் தோல்வியையே சந்திக்கும். இங்கே, சிக்சர்கள் விளாசுவதற்கு எவ்வளவு ஈடுபாடுகள் காட்டப்படுகிறதோ, அதே அளவிற்கு ரன்களை ஓடி எடுக்கவும் ஈடுபாடு காட்ட வேண்டும். அதற்கான பலனை தான் டிபெண்டிங் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து அனுபவிக்கிறது.

 பாகிஸ்தானில் கொடுமை! பலாத்காரம் செய்யப்பட்ட இந்து சிறுமியை குற்றவாளியுடன் செல்ல நீதிமன்றம் உத்தரவு பாகிஸ்தானில் கொடுமை! பலாத்காரம் செய்யப்பட்ட இந்து சிறுமியை குற்றவாளியுடன் செல்ல நீதிமன்றம் உத்தரவு

ஆஸி. மைதானங்கள்

ஆஸி. மைதானங்கள்

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆடினாலும், பின்னர் மிடில் ஓவர்களில் டெவோன் கான்வே - வில்லியம்சன் இணைந்து அதிக ரன்களை ஓடியே எடுத்தனர். அதேபோல் இறுதி நேரத்தில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் ஃபீல்டர்களுக்கு இடையே உள்ள பெரிய இடைவெளியை பயன்படுத்தி எப்படி ஓடி ரன் சேர்க்க வேண்டும் என்பதை நீசம் - கான்வே இணை காட்டியது. இதன் மூலமாகவே நியூசிலாந்து அணி 200 ரன்களை எடுக்க முடிந்தது.

நிலைக்காத அதிரடி வீரர்கள்

நிலைக்காத அதிரடி வீரர்கள்

ஆனால் மறுபுறம் ஆஸ்திரேலிய அணி முழுக்க முழுக்க ஹிட்டர்களை நம்பியே களமிறங்கியது. 201 ரன்கள் என்ற டார்கெட்டை எட்டுவதற்கு அதிரடியான ஆட்டம் அவசியம் என்றாலும், விக்கெட்டும் அவசியம் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறந்துவிட்டனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, யார் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் யாரும் நிலைத்து நிற்காமல் 111 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டாகியது.

ஸ்டீவ் ஸ்மித்தின் தேவை

ஸ்டீவ் ஸ்மித்தின் தேவை

பிளேயிங் 11ல் ஸ்டீவ் ஸ்மித் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்திருக்காது என்பதை கடந்து, போராட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும். ஏனென்றால் விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரியும் போது தேவைக்கேற்ப பவுண்டரிகளும், ரன்கள் ஓடி சேர்ப்பதில் ஸ்டீவ் ஸ்மித் வல்லவர். அதேபோல் அவரின் அன் ஆர்தடாக்ஸ் பேட்டிங்கும் பவுலர்களின் லைன் மற்றும் லெந்தை மாற்றும் வகையில் இருந்திருக்கும். ஸ்டீவ் ஸ்மித்தை களமிறக்காமல் ஆஸ்திரேலிய அணித் தேர்வில் செய்த தவறு, சொந்த மண்ணிலேயே தோல்வியை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்திய அணியின் திட்டம்

இந்திய அணியின் திட்டம்

இந்த விவகாரத்தோடு அப்படியே இந்திய அணியை ஒப்பிட்டு பார்த்தால், தொடக்க வீரர்கள் அதிரடியாகவும் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி நிலைத்து நின்று 20 ஓவர்கள் வரை ஆடுவதையே திட்டமாக வைத்துள்ளது. இது ஆஸ்திரேலியா ஆடுகளங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இமாலய சிக்சர்களை விளாச முடியாது என்பதை அறிந்து, விராட் கோலிக்கான திட்டத்தை இந்திய அணி உருவாக்கியுள்ளது. இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

English summary
Australia's loss against New Zealand is attributed to Steve Smith's absence. Let's look at the impact and the need for players like Steve Smith.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X