Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்பா.. இரவில் சைக்கிளை எடுத்துக்கிட்டு விரைந்த மேயர் பிரியா! பின்னாடியே போன அதிகாரிகள்.. காரணமே வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேயர் பிரியா நேற்று இரவு திடீரென சென்னையில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மேயராக பதவி வகித்து வரும் மேயர் பிரியா கடந்த சில நாட்களாக வார்டு வாரியாக பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறார். வார்டு வாரியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட கோடம்பாக்கத்தில் பல்வேறு வீடுகளுக்கு சென்று மேயர் பிரியா மக்களின் குறைகளை கேட்டறிந்து அங்கு உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேயர் பிரியா ஆய்வு

மேயர் பிரியா ஆய்வு

அப்போது சாலையில் நின்று மேயர் பிரியா கூழ் குடித்ததும் கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் நேற்று சென்னையில் மேயர் பிரியா திடீரென சைக்கிள் ஓட்டினார். சென்னையில் தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் பல இடங்களில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன.

சிங்கார சென்னை 2.0

சிங்கார சென்னை 2.0

அதேபோல் சென்னையை அழகாக்கும் விதமாக போஸ்டர்கள் ஓட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைகளை அழகாக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பூங்கா அமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நேற்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. அதாவது சிங்கார சென்னையில் இரவிலும் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.

சைக்கிள் பேரணி

சைக்கிள் பேரணி

அடையாறில் இருக்கும் இந்திரா நகரில் இந்த பேரணி நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு சைக்கிள் பேரணி செய்தனர். அப்போது நிகழ்வை தொடங்கி வைத்த மேயர் பிரியா சட்டென ஓடி சென்று சைக்கிள் ஒன்றை எடுத்து ஓட்ட துவங்கினார். இதை அங்கிருந்த அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. அவர் சைக்கிளை எடுத்து வேகமாக ஓட்ட தொடங்கியதும் அதிகாரிகள் அவர் பின் நடக்க தொடங்கினர்.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்


சைக்கிளை எடுத்துக்கொண்டு சில மீட்டர்கள் மேயர் பிரியா ஓட்டினார். அதன்பின் அப்படியே மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார். மேயர் பிரியா இப்படி திடீரென சைக்கிளை ஓட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் பெண்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 2 கிமீ வரை உற்சாகமாக சைக்கிள் ஓட்டினர். மேயர் பிரியா சைக்கிள் ஓட்டிய இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+