சத்தமே இன்றி சவுக்கடி! விடியவிடிய பேசிய எடப்பாடி.. அதிகாலையில் உதயமான "மாஸ்டர்பிளான்".. கதை க்ளோஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கான பல்வேறு ஆலோசனைகள், கூட்டங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதை பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

அதிமுக நிர்வாகிகள் பலர் ஒற்றை தலைமை வேண்டும்.. எடப்பாடியைத்தான் அந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

என்ன நினைத்தார்கள்?

என்ன நினைத்தார்கள்?

முதலில் அதிமுக பொதுக்குழுவில் இந்த ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றி, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரலாம் என்றுதான் முதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நினைத்தது. ஆனால் இதற்கு அதிமுக தீர்மான குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதாவது பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மான கூட்டத்தில்தான் முடிவு எடுக்க வேண்டும். தீர்மான கூட்டத்தில்தான் இதற்கான லிஸ்ட் தயாரிக்கப்பட வேண்டும்.

தீர்மானம்

தீர்மானம்

இதை உருவாக்க அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேர் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள். இதனால் எப்படியாவது ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை இந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்று அவர்கள் பிளான் செய்தனர். ஆனால் சட்டப்படி, இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் கையெழுத்து போட்டால்தான் தீர்மானம் பொதுக்குழுவிற்கே செல்லும்.

ஓபிஎஸ் திட்டவட்டம்

ஓபிஎஸ் திட்டவட்டம்

ஆனால் இந்த கூட்டத்தில் கடந்த முறை கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம்.. என்னை நீக்குவதற்கு என் கிட்டவே கையெழுத்து கேட்கிறீர்களா? தீர்மானத்தில் நான் கையெழுத்து போடுவேன் என்று நினைக்கிறீர்களா? என்ன தீர்மானம் வேண்டுமானாலும் கொண்டு வாங்க.. ஆனா ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் இருந்தால், அதை பொதுக்குழுவிற்கு கொண்டு போக அனுமதிக்க மாட்டேன். நான் கையெழுத்து போட்டால் தானே நடக்கும் என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறாராம்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வீட்டில் சென்னையில் விடிய விடிய ஆலோசனை செய்து இருக்கிறார். அதிமுகவின் முக்கிய தலைகள், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனை செய்து இருக்கிறார். நேற்று இரவு 10 மணிக்கு இந்த ஆலோசனை தொடங்கி இருக்கிறது. பின்னிரவு 2 மணி வரை மீட்டிங் சென்று இருக்கிறது. இதில் பல்வேறு விஷ்யங்களை எடப்பாடி தனது ஆதரவாளர்களுடன் பேசி இருக்கிறார்.

 எடப்பாடி பழனிசாமி பிளான்

எடப்பாடி பழனிசாமி பிளான்

பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதை செய்தால் தானாக ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் கையெழுத்து போடும் அதிகாரம் காலியாகிவிடும். பின்னர் பொதுக்குழுவிலேயே பொதுச்செயலாளர் பதவி தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் அதற்கு முதலில் தீர்மானம் பொதுக்குழு மேஜைக்கு வர வேண்டுமே.. ஓபிஎஸ்தான் தீர்மான கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அனுமதிக்க மாட்டேன் என்றுவிட்டாரே என்று எடப்பாடியிடம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆலோசனை

மேலும் ஆலோசனை

இதையடுத்து மேலும் ஆலோசனை செய்த எடப்பாடி ஆதரவாளர்கள், சில சட்ட வல்லுனர்களிடம் பேசி உள்ளனர். என்ன செய்தால் சரியாக இருக்கும் சட்ட சிக்கல் வராது என்று ஆலோசனை செய்துள்ளனர். ஆலோசனைக்கு பின் அதிகாலையில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி மொத்தமாக கட்சி தீர்மானம் கொண்டு வர தானே அவர் கையெழுத்து போட வேண்டும். நாம் தனி தீர்மானம் கொண்டு வருவோம்.

தனி தீர்மானம்

தனி தீர்மானம்

தனி தீர்மானத்தை மேஜைக்கு கொண்டு வர அவர் அனுமதி தேவை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம். இதன் மூலம் பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானத்தை மேஜைக்கு கொண்டு வந்து அதில் விவாதத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைக்கிறாராம். இதன் மூலம் ஓபிஎஸ் கதையை முடிக்க இபிஎஸ் பிளான் செய்து இருக்கிறாராம். ஆனால் சட்டப்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் என்பதால் அதை இப்போதே நீக்க முடியுமா என்ற குழப்பம் எழுந்து உள்ளதாம் எடப்பாடி தரப்பிற்கு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+