சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் தமிழ்நாடு.. கவனிச்சீங்களா? 24 மணி நேரமாகியும் "அதை" பற்றி வாயே திறக்காத மோடி.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை பயணம் முடிந்த நிலையில், அவர் சென்னை பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை புரிந்தார். இதற்கு முன் பொங்கல் சமயத்தில் பிரதமர் தமிழ்நாடு வர இருந்தார்.. ஆனால் கொரோனா காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

“மோடி ஜி.. இந்த மேட்டர் என்னாச்சு?”- 17 இடங்களில் திடீரென முளைத்த மர்ம பேனர்கள்.. யார் பார்த்த வேலை?“மோடி ஜி.. இந்த மேட்டர் என்னாச்சு?”- 17 இடங்களில் திடீரென முளைத்த மர்ம பேனர்கள்.. யார் பார்த்த வேலை?

மோடி சென்னை

மோடி சென்னை

இந்த நிலையில்தான் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாற்றுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நேரு அரங்கிற்கு கார் மூலம் மோடி வந்தார்,.

Recommended Video

    PM Modi-ஐ மேடையில் வைத்துக்கொண்டே Dravidian Model பற்றி பேசிய Stalin #Politics
    பிரம்மாண்ட வரவேற்பு

    பிரம்மாண்ட வரவேற்பு

    இந்த பயணத்தின் போது மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சாலை பயணம் முழுக்க மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியமாக பிரதமர் மோடி செல்லும் சாலை முழுக்க மிகப்பெரிய அளவில் ஆடல்கள், பாடல்கள், போஸ்டர்கள் என்று பிரம்மாண்ட ஏற்பாடுகள் பாஜக மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    வீடியோ

    வீடியோ

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடி தமிழ்நாடு பயணம் குறித்து இன்று ட்விட் செய்துள்ளார். நன்றி தமிழ்நாடு! நேற்றைய வருகை மறக்க முடியாதது. என்று பிரதமர் மோடி பாராட்டி புகழ்ந்து உள்ளார். அதோடு தமிழ்நாடு பயணம் குறித்த வீடியோ ஒன்றையும் எடிட் செய்து போட்டுள்ளார். இந்த பயணத்தை ஹைலைட் விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி புகழ்ந்து இருக்கிறார்.

     அமித் ஷா

    அமித் ஷா

    அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழகம் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகிறது. பிரதமர் மோடி மீது அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மோடிக்கு கொடுக்கப்பட்ட பெரிய வரவேற்பை இவர்கள் இப்படி பாராட்டி உள்ளனர். இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்காத நிலையில், வரவேற்பை பார்த்து வியந்து இவர்கள் போஸ்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    வீடியோ இல்லை

    வீடியோ இல்லை

    அதே பிரதமர் மோடி நேற்று ஹைதராபாத் சென்றார். ஆனால் இந்த பயணம் பற்றி இதுவரை மோடி வீடியோ எதையும் போடவில்லை. நேற்று மேடையில் பேசிய போது அதை பற்றி வீடியோ வெளியிட்டார் (சென்னை நிகழ்ச்சிக்கும் வெளியிட்டார்). ஆனால் அந்த பயணம் பற்றி தமிழ்நாட்டிற்கு வீடியோ வெளியிட்டது போல எந்த வீடியோவையும் மோடி வெளியிடவில்லை. அதேபோல் பிரதமர் மோடி தனது ஹைதராபாத் பயணம் குறித்து பெரிதாக போஸ்ட் எதுவும் போடவில்லை.

     பாஜக சுட்டிக்காட்டு

    பாஜக சுட்டிக்காட்டு

    இதை பாஜகவினர் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். பாருங்கள் மோடிக்கு தமிழ்நாடு என்றால் விருப்பம். அதனால்தான் மோடி தமிழ்நாட்டை புகழ்ந்து.. தனது பயணத்தை நினைவு கூர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்று பாஜகவினர் இதை பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதை குறிப்பிட்டு பேசி உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி தமிழை உயர்த்தி பிடித்தார்.

    மோடி பயணம்

    மோடி பயணம்

    தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிரதமர் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போட்டு இருக்கிறார். வேறு மாநிலங்களுக்கு செய்யாததை அவர் தமிழ்நாட்டின் பயணத்தில் செய்துள்ளார். இதுதான் தமிழ்நாடு. அவருக்கு தமிழ்நாடு என்றால் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று ஹைதராபாத்தில் பிரதமர் மோடிக்கு பெரிதாக வரவேற்பு கொடுக்கப்படவில்லை. அவரை தெலுங்கானா முதல்வர் கேசிஆர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த பயணம் பற்றியும் 24 மணி நேரம் ஆகியும் மோடி பெரிதாக போஸ்ட் எதையும் செய்யவில்லை.

    English summary
    Why did not PM Modi post anything about Hyderabad trip like Chennai trip? பிரதமர் மோடியின் சென்னை பயணம் முடிந்த நிலையில், அவர் சென்னை பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X