சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநர் மாளிகைக்கு குறி! சீனியரிடம் நைசாக கேட்ட முதல்வர்! "சீரியஸ்" மேட்டர்.. வேண்டாமே! பறந்த அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வருக்கும் ஆளுநருக்குமான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகை குறித்து சட்டப்பேரவையில் எதிரொலித்த விவகாரம் ஒன்றை முதலவர் ஸ்டாலின் சீரியசாக எடுத்துக் கொண்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வாரம் துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு திமுக கூட்டணி கட்சியான விசிக ஆதரவு அளித்தது.

ஆளுநர் ரவி ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்திய நிலையில்தான் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியது.

ஓ.பன்னீர்செல்வம் ஊரில் கொடி பறக்கவிட்ட ஸ்டாலின்! காணொலியை தவிர்த்து நேரில் களமிறங்கிய பின்னணி! ஓ.பன்னீர்செல்வம் ஊரில் கொடி பறக்கவிட்ட ஸ்டாலின்! காணொலியை தவிர்த்து நேரில் களமிறங்கிய பின்னணி!

 விசிக கோரிக்கை

விசிக கோரிக்கை

இந்த நிலையில் மசோதா நிறைவேற்றிய பின், சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனை செல்வன் , ஆளுநர் மாளிகை வளாகம் இருக்கும் பகுதி தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமானது. 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆளுநருக்கு எதற்கு அவ்வளவு பெரிய வளாகம்? அதனால், ரிசர்வ்டு பாரஸ்டுக்கு சொந்தமான அந்த இடத்தை தமிழக வனத்துறை மீட்க வேண்டும்.

கிரீன் வேஸ்

கிரீன் வேஸ்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பங்களா பகுதியில் கவர்னருக்கு ஒரு பெரிய பங்களாவை அமைத்து தரலாம்.. அதோடு ஊட்டியில் உள்ள மாளிகையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்'' என்று சொல்ல, பேரவை நிமிர்ந்து அவரை பார்த்தது. விசிக தரப்பிடம் இருந்து இப்படி ஒரு கோரிக்கை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில், நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் இறுதிநாள் பொதுக்கூட்டத்தை தி.க. வீரமணி நடத்தினார். இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பொதுப்பணித்துறை பராமரிப்பு

பொதுப்பணித்துறை பராமரிப்பு

அப்போது, தி.க.வீரமணி, தமிழக வனத்துறைக்கு சொந்தமானதும் பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலும் இருக்கும் கவர்னர் மாளிகை வளாகத்தை மீட்க வேண்டும். மீட்டு அந்த இடத்தில் தமிழக அரசுக்கென்று புதிய தலைமைச் செயலகத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பேரவையிலும் பொதுக்கூட்டத்திலும் எதிரொலித்த இந்த விவகாரம் அரசியல் கட்சிகளிடம் தற்போது பரவலாக பேசு பொருளாகி வருகிறது.

சீரியஸ்

சீரியஸ்

இதை முன்பே ஒன் இந்தியா தரப்பில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனையடுத்து இந்த விவகாரம் ஸ்டாலினை ஆலோசிக்க வைத்திருக்கிறது. இது பற்றி முதல்வர் ஸ்டாலின் மிகவும் சீரியஸாக ஆலோசனை செய்து வருகிறாராம். இது குறித்து சீனியர் வழக்கறிஞர்களிடம் ஸ்டாலின் விவாதிக்க, இடம் மாற்றினால் ஆளுநர் மாறப் போவதில்லை. தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாமே என சொல்லியிருக்கிறார்களாம்.

 சர்ச்சை

சர்ச்சை

இடத்தை மாற்றினால் சட்டப்படி சிக்கல்கள் வரலாம். அதோடு ஆளுநர் மாளிகை இருப்பது காட்டுப்பகுதியில். அங்கு புதிதாக கட்டுமானங்களை மேற்கொள்வது கடினம். அதனால் வேண்டாம் என்று அந்த வழக்கறிஞர் ஆலோசனை வழங்கி இருக்கிறாராம். இதனால் இப்போதைக்கு தேவையின்றி ஆளுநர் மாளிகையை இடம் மாற்றம் எல்லாம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் ஆளும் தரப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Why DMK goverment may not try to change the residence of Governor Ravi? முதல்வருக்கும் ஆளுநருக்குமான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகை குறித்து சட்டப்பேரவையில் எதிரொலித்த விவகாரம் ஒன்றை முதலவர் ஸ்டாலின் சீரியசாக எடுத்துக் கொண்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X