சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலாவை மிக கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி... அந்த காலத்து அச்சம்தான் காரணமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுக்குள் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே கூடாது என்பதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருப்பதன் பின்னணிதான் இப்போது அக்கட்சியில் ஹாட் டாபிக்.

அதிமுகவுக்கு இரட்டை தலைமையை நீக்கி ஒற்றை தலைமையை கொண்டு வரவேண்டுமாயின் சசிகலாவை நாம் ஏற்க வேண்டும். உங்களுக்கு மட்டுமல்ல கொங்கு சமுதாயத்தையே எட்டிக் காயாக நினைக்கும் ஓபிஎஸ்சின் அதிகாரத்தை குறைக்க வேண்டுமாயின் சசிகலாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என மிக நெருக்கமான சீனியர் தலைவர்களே எடப்பாடியை வலியுறுத்தி வருகின்றனர்.

4 நாட்களாக வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருக்கா?.. வெதர்மேன் ட்வீட்! 4 நாட்களாக வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருக்கா?.. வெதர்மேன் ட்வீட்!

ஆனால், இதனை ஏற்காத எடப்பாடி, சசிகலாவை முன்பை விட அதிகமாக விமர்சித்து தள்ளுகிறார். எடப்பாடி ஏன் சசிகலாவை இந்தளவுக்கு வெறுக்க வேண்டும்? என்ன காரணம் ? என்று அதிமுக மாநில நிர்வாகிகள் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள்.

புதிய கோஷ்டிகள் உருவாகும்

புதிய கோஷ்டிகள் உருவாகும்

சசிகலா வந்தால் மட்டுமே கட்சி மீண்டும் உடைபடாமல் பாதுகாக்க முடியும் . இல்லையெனில் மாவட்டம் வாரியாக அதிமுகவில் கோஷ்டிகள் உருவாவதை தடுக்க முடியாது என்று எடப்பாடியை சந்திக்கும் நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.

கொங்கும் சப்போர்ட்?

கொங்கும் சப்போர்ட்?

மேலும், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சொன்னீர்களே, மேற்கு மாவட்டத்தில் கூட அதனை நிறைவேற்றவில்லை ; கொங்கு மண்டலத்தில் உள்ள மா.செ.க்கள் யாருமே அப்படி தீர்மானம் போடவில்லை. அப்படின்னா என்ன அர்த்தம்? கொங்கு மண்டலம் கூட சசிகலாவை ஏற்கலாம் என்பதுதானே!

எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்

எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்

அதனால் பிடிவாதத்தை விட்டுவிட்டு சசிகலாவை அதிமுகவுக்குள் அனுமதியுங்கள் அண்ணே என்று உரிமையாகவும் நிர்வாகிகள் எடப்பாடியை வலியுறுத்துகிறார்கள். ஆனாலும், சசிகலாவை எதிர்ப்பதை எடப்பாடி பழனிசாமி கைவிடவில்லை.

Recommended Video

    Apollo உள்ளே இருந்த EPS.. வெளியே காத்திருந்த Sasikala.. பரபரப்பான AIADMK
    அன்று சசிகலா செய்தது..

    அன்று சசிகலா செய்தது..

    இதன் பின்னணி என விசாரித்தால், சசிகலாவை சேர்த்துக் கொண்டால் ஜெயலலிதாவோடு இருந்தபோது நடந்த நடைமுறைகளையே மீண்டும் அமல்படுத்துவார் என்கிற பயம்தான் எடப்பாடிக்கு இருக்கிறது. இப்போதும் சசிகலாவை மீண்டும் சேர்த்தால், அதையே அமல்படுத்துவார்... என்கிற அந்த அச்சம்தான் எடப்பாடி பழனிசாமிக்காம்... அதனால் தான் சசிகலாவை கடுமையாக எதிர்க்கிறார் என்று பின்னணி ரகசியத்தை போட்டுடைத்தார் மாஜி சீனியர் அமைச்சர் ஒருவர்.

    English summary
    Here the reasons for Ex CM Edappadi Palaniswami's strongly oppose to Sasikala in AIADMK,.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X