Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் திடீர்ன்னு எரியுதாம், வெடிக்குதாம்! பயமுறுத்தும் இ பைக்குகள்.. என்னாச்சு? எப்படி பாதுகாப்பது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் திடீரென எலக்ட்ரிக் பைக்குகள் வெடிப்பதும், தீ பற்றி எரிவதும் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. எலக்ட்ரிக் பைக்குகள் இப்படி திடீரென வெடிக்க என்ன காரணம்? எதனால் இப்படி தீ பிடிக்கிறது? அதை எப்படி தடுப்பது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Recommended Video

    அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்.. E Bikes அதிகம் வெடிக்க என்ன காரணம்?

    சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் பலியானார்கள்.

    இரவில் சார்ஜ் போடும் போது பைக் பேட்டரி வெடித்து புகை ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் மூச்சு முட்டி இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    புனே சம்பவம்

    புனே சம்பவம்

    இதேபோல் கடந்த வாரம் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

    ஓலா விளக்கம்

    ஓலா விளக்கம்

    இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், புனேவில் நடந்த விபத்து குறித்து நாங்கள் அறிந்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம். தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நன்றாக இருக்கிறார். பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பேட்டரிகள் - என்ன காரணம்?

    பேட்டரிகள் - என்ன காரணம்?

    சரி இது போன்ற இ பைக்குகள் திடீரென தீ பிடிக்க அல்லது வெடிக்க என்னதான் காரணம் என்று பார்க்கலாம். இ பைக்குகள் வெடிக்க முக்கியமான காரணம் அதன் பேட்டரிதான். போன், லேப்டாப் சில இடங்களில் தீ பிடிக்கும், பவர் பேங்க் வெடிக்கும் அல்லவா? அது போலத்தான் இதுவும். இ பைக்குகள் பொதுவாக லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்தும். இதை பொதுவாக இ பைக்குகள் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.

    எப்படி?

    எப்படி?

    இதை இந்தியாவில் இறக்குமதி செய்யும் போது நிறுவனங்கள் அதை பெரிதாக சோதனை செய்வது இல்லை. அதோடு பல ஆயிரம் பேட்டரிகள் இறக்குமதி செய்யப்படும் போது சில பேட்டரிகளில் குறைகள் இருப்பதை கண்டுபிடிக்க முடிவது இல்லை. இந்த பேட்டரிகளில் ஏற்படும் பாதிப்பே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் ஆகிறது. ஸ்வீடனை சேர்ந்த RISE Research Institutes என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் இ பைக்குகள் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற விபத்துகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    எப்படி நெருப்பு ஏற்படுகிறது?

    எப்படி நெருப்பு ஏற்படுகிறது?

    லித்தியம் அயான் பேட்டரிகளில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டால், வாகனம் விபத்துக்கு உள்ளாகும் போது அதில் டேமேஜ் ஏற்பட்டால் அந்த பேட்டரிகள் வெடிக்கவோ, தீ பிடிக்கவோ வாய்ப்பு உள்ளது. அதேபோல் இதன் வெப்பநிலை அதிகரிப்பது, வோல்டேஜ் அதிகரிப்பது ஆகியவையும் திடீரென இ பைக்குகள் வெடிக்க காரணமாக அமையும். சிறிய அளவிலான விபத்துகள் காரணமாக இ பைக்குகளின் பேட்டரிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

    கேஸ் வெளியேறும்

    கேஸ் வெளியேறும்

    பொதுவாக இ பைக்கில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி ஏதாவது ஒரு வகையில் சேதம் அடைந்தால், அல்லது வெப்பநிலை உயர்ந்தால் அது உள்ளே இருக்கும் கெமிக்கல்களை வாயுவாக வெளியிடும். இது திடீரென நெருப்பை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் மூலம் இ பைக்குகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் பேட்டரி பெயிலியர் மூலமாக இ பைக்குகள் வெடிக்கலாம். தயாரிப்பு குறைபாடு, வாகனம் ஓட்டுபவர் பைக் பேட்டரியை தவறாக கையாள்வது, வெப்பநிலை அதிகரிப்பது, குறைந்த குவாலிட்டி பேட்டரிகளை பயன்படுத்துவது ஆகியவை பேட்டரி பெயிலியர் ஆக காரணமாக இருக்கலாம்.

    ஷார்ட் சர்க்யூட்

    ஷார்ட் சர்க்யூட்

    மேலும் வீட்டில் மின்னணு சாதனங்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் போலவே இதிலும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பாதிப்புகள் நொடிப்பொழுதில் நமக்கு தெரியாமல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஷார்ட் சர்க்யூட் பேட்டரியின் உட்புறத்தில் மட்டுமின்றி வெளிப்புறமும் ஏற்படலாம் . தவறான இணைப்புகள், அதீத வோல்டேஜ், சார்ஜ் செய்யும் போது ஏற்படும் வோல்டேஜ் மாற்றம், சரியாக பராமரிக்காதது, இரவு முழுக்க அதிக நேரம் சார்ஜ் போடுவது போன்றவை இ பைக்குகளின் பேட்டரிகள் ஷார்ட் சர்க்யூட் மூலம் வெடிக்க காரணமாக அமையும்.

    எப்படி தடுக்கலாம்?

    எப்படி தடுக்கலாம்?

    ஆனால் அதற்காக இ பைக்குகள் என்றால் ஆபத்தானது என்று கூறி விட முடியாது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் கூடத்தான் ஆபத்து இருக்கிறது. அதை எப்படி நாம் பாதுகாப்பாக கையாள்கிறோமோ அதேபோல் இதையும் பாதுகாப்பாக கையாள வேண்டும்.

    இ பைக்குகள் நிறுவனங்கள் ஒவ்வொரு பைக்கையும் பராமரிக்க கொடுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
    இரவு முழுக்க சார்ஜ் போட கூடாது.
    இ பைக் சார்ஜ் ஆகும் போது அருகில் இருப்பது நலம்.
    பேட்டரிகள் வெப்பநிலை அறை வெப்பநிலையில் இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்.
    நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் வைத்திருக்க கூடாது.

    ஆதாரம் இல்லை

    ஆதாரம் இல்லை

    இ பைக் ஆங்காங்கே நெருப்பு பற்றினாலும், வெடித்தாலும் கூட இது பாதுகாப்பு குறைவானது என்ற ஆதாரம் எங்கும் இல்லை. எல்லா புதிய தொழில்நுட்பங்களும் ஏதாவது ஒரு ஆபத்தை கொண்டு இருக்கும். அதை சரி கட்ட சில பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். விமானம் விபத்துக்கு உள்ளாகிறது என்று எல்லோரும் விமானங்களை பயன்படுத்தாமல் இருப்பது இல்லை. அது போலத்தான் இ பைக்குகளையும் முறையான பாதுகாப்போடு பயன்படுத்த வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+