பாஜக மீது பொய் வழக்கு? தமிழகம் வரும் நட்டாவின் நால்வர் குழு! பிளானை உடைத்த அண்ணாமலை! திரும்பும்DMK
சென்னை: தமிழக அரசு பொய் வழக்குகள் போட்டு தங்களை கைது செய்வதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் அதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர் வரும் 27 ம் தேதி தமிழகம் வரும் நிலையில் அவர்கள் மேற்கொள்ள உள்ள பணி குறித்து மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து பாஜவை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் பதிவிட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் பாஜகவினரை குறிவைத்து வேண்டுமென்றே போலீசார் கைது செய்கின்றனர். இதன் பின்னணியில் திமக உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சமீபத்தில் சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்பட்டதால் மாநகராட்சி சார்பில் ஜேசிபி வாகனம் உதவியுடன் அகற்றப்பட்டது.இதுதொடர்பாக பாஜகவினர், போலீசார் இடையே பிரச்சனை வெடித்தது. பாஜக நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பாஜகவினர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு பாஜகவினர் மீது திமுக அரசு, திட்டமிட்டு காவல்துறை அடக்குமுறையை ஏவுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவின் பேரில் 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு தமிழக பாஜகவினர் மீது காவல் துறையினை ஏவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறித்து நேரில் விசாரித்த இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது.
இந்நிலையில் தான் சென்னை திநகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகம் வரும் ஜேபி நட்டாவின் நால்வர் குழு மேற்கொள்ள உள்ள பணி குறித்து விளக்கம் அளித்தார். இதுதொடர்பா அவர் கூறியதாவது: தேசிய தலைவர் ஜேபி நட்டா சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அக்டோபர் 27ம் தேதி தமிழகம் வர உள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வரும் தற்போதைய எம்பியுமான சதானந்தகவுடா, பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி பிசி மோகன், ஆந்திர பாஜக தலைவர் புரண்டேஸ்வரி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும் எம்பியுமான சத்யபால் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.
இந்த குழுவின் நோக்கம் என்னவென்றால் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதாவது 2021 மே மாதத்துக்கு பிறகு தமிழகத்தில் திமுக போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக தொண்டர்களை கைது செய்து வருவது தொடர்பான விபரங்களை வழங்க உள்ளனர். வெள்ளிக்கிழமை கைது செய்தால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றம் இருக்காது. கைது செய்யக்கூடாது என்ற குற்றங்களில் கைது செய்வது. செக்சன் 41 ஏ நோட்டீஸ் வழங்காமல் கைது செய்வது, ஜாமீன் கிடைக்கும் பிரிவுகளில் வழக்கு போடக்கூடாது என்பதற்காக ஜாமீனில் வரமுடியாத வேறு பிரிவுகளை சேர்த்து வழக்குகள் பதிவு செய்வது உள்ளிட்டவை பற்றி குழு விசாரிக்கும்.
மேலும் தவறான செக்சன் போட்டு இருந்தாலும் கூட பாஜக தொண்டர்கள் நீதிமன்றங்கள் செல்லும்போது 500, 600 திமுக வழக்கறிஞர்களை அழைத்து வந்து நீதிபதியை முற்றுகையிட்டு பிரஷர் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை ஆதாரங்கள் அடிப்படையில் ஆவணப்படுத்தி உள்ளோம். மேலும் காவல்துறைக்கு கொடுக்கும் அழுத்தங்கள் குறித்தும் இந்த குழு விசாரிக்க உள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்கள் அடிப்படயைில் ஆவணங்கள் தயாரித்து உள்ளோம்.
மேலும் பாஜகவினர் மீது தவறான செக்சனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. ஆனால் அதற்குள் 2, 3 வாரங்கள் நமது தொண்டர்கள் சிறையில் இருந்துவிட்டனர். மேலும் பிரதமர், பாஜக தலைவர்கள் குறித்தும், பாஜக கொள்கைகள் குறித்தும், பாஜக பெண் நிர்வாகிகள் குறித்தும் வன்மமாக ஆபாசமாக கருத்து சொல்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் பாஜக தொண்டர்கள் மீது எப்ஐஆர் போட்டு கைது செய்துள்ளனர். இதுதொடர்பான டாக்குமெண்ட்டுகளை குழுவுக்கு கொடுக்க உள்ளோம்.
அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் புத்தகமாக வழங்க உள்ளோம். தமிழகத்தில் ஒவ்வொரு வழக்கு குறித்தும் அதில் குறிப்பிடுவோம். இதற்காக ஒரு குழு வேலை செய்து வருகிறது. எப்படி தவறாக செயல்படுகிறார். நீதித்துறையை எப்படி நிர்பந்திக்கிறார்கள் என்பது குறித்து அடிப்படை ஆதாரத்தோடு வழங்க உள்ளோம். ஒரு ஆட்சி கையில் இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து தவறாக செயல்பட முடியாது. இது மிகவும் தவறு. அதை ஜேபி நட்டா உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளார்.
இந்த 4 பேர் கொண்ட குழு 27ம் தேதி குழு தமிழகம் வந்து நிர்வாகிகளை சந்திக்க உள்ளது. இந்த குழுவிடம் நிர்வாகிகள் கருத்துகள் தெரிவிக்கலாம். அதேபோல் 28 ம் தேதி சென்னையில் தொண்டர்கள் சிலரை அவர்களின் வீடுகளுக்கு சென்று இந்த குழுவினர் உள்ளனர்'' என்றார். பாஜகவின் இந்த நடவடிக்கையை திமுக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications