Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 பேர்.. ‘திடீர் ட்விஸ்ட்’.. ஜூன் 17ல் போன அதே இடம்.. அடுத்த மூவ் என்ன? - ‘க்ளூ’ கொடுத்த ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓபிஎஸ் திடீரென தனது ஆதரவாளர்களோடு சென்று பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வு பற்றிய தகவல்கள் கிளம்பியுள்ளன.

அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு மற்றும் ஓ பன்னீர்செல்வம் பிரிவு என இரண்டு பிரிவாக பிரிந்து இருந்தாலும் எடப்பாடிபழனிசாமி பிரிவில் தான் அதிக கட்சியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக தலைமை அலுவலக சாவி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளில் எடப்பாடிபழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் வந்துள்ள நிலையில், பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டை நம்பி இருக்கிறார் ஓபிஎஸ்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்ட ஐகோர்ட் இரு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இதில் வரும் உத்தரவைப் பொறுத்தே ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி.

நெருக்கும் சிக்கல்கள்

நெருக்கும் சிக்கல்கள்

அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் இங்கே சில மூவ்களைச் செய்த நிலையில், டெல்லியில் பெரிய அடி விழுந்தது. அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்து வரும் நிலையில் அவர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இணைவிலும் சிக்கல்?

இணைவிலும் சிக்கல்?

அதிமுக விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவோம் எனப் பேசி வருகிறார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனும் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனர். அவர்கள் இணைந்து செயல்பட ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஓபிஎஸ்ஸின் நீதிமன்ற நகர்வுகளில் வரும் தீர்ப்புகள் அவருக்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன.

அடுத்து அதிரடி

அடுத்து அதிரடி

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாகவே அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென நேற்று இரவு சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்திற்குச் சென்ற ஓ பன்னீர்செல்வம் அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

6 பேர்

6 பேர்

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் இந்த ஆலோசனையின்போது உடன் இருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், அதிமுகவின் மூத்த முன்னோடி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்ததாகக் கூறினார்.

திடீர் ஆலோசனை

திடீர் ஆலோசனை

ஆனால், இந்தச் சந்திப்பின்போது அதிமுகவின் நிலை, அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாகவும், ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியதாகவும், அவரது கருத்துகளைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 17 அன்றே

ஜூன் 17 அன்றே

அதிமுக ஒற்றைத் தலைமை மோதல் தொடங்கியபோதே ஜூன் மாதம் 17ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரனை சென்று சந்தித்துப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். ஒரு மாதத்திற்கு முன்பு, ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு இடையே பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து சசிகலாவும் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தான் மீண்டும் பண்ருட்டியாரைச் சென்று சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஓபிஎஸ்.

பண்ருட்டியார்

பண்ருட்டியார்

தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர், ஜெ. ஆகியோருக்கும் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியவர். விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியபோது அவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் படையோடு சென்று மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

அடுத்தகட்ட நகர்வு

அடுத்தகட்ட நகர்வு

ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரோடு பண்ருட்டி ராமச்சந்திரன் ஒன்றரை மணி நேரம் நடத்திய இந்த ரகசிய ஆலோசனையில், அடுத்தகட்டமாக என்ன செய்வது என ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஓபிஎஸ், தனது விருப்பம் என்ன என்பதையும் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் தெளிவாகக் கூறியிருக்கிறாராம். இதனை அடுத்து, அடுத்தகட்ட மூவ் பற்றி சில அதிரடி அறிவிப்புகள் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

க்ளூ கொடுத்த ஓபிஎஸ்

க்ளூ கொடுத்த ஓபிஎஸ்

இந்த ஆலோசனையின்போது மேலும் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன என பரபரத்து வரும் நிலையில், வெளியே வந்த ஓபிஎஸ், இந்த ஆலோசனை தொடர்பாக சில 'க்ளூ'க்களையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களையே. அடிப்படைத் தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில்தான் எங்களுடைய அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இதயப்பூர்வமான ஏற்பாடு எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ். இதன்மூலம், தொண்டர்களை அடிப்படையாக வைத்து ஓபிஎஸ் தரப்பு ஏதோ திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் அலையடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+