Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போ வேண்டாம்.. "கட் அண்ட் ரைட்டாக" சொன்ன தலை.. ஸ்டாலின் போட்ட புதுகணக்கு? வெயிட்டிங் உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட போவதாக பல்வேறு செய்திகள் கடந்த சில நாட்களாக வந்த நிலையில்.. அந்த மாற்றம் தற்காலிகமாக தள்ளிப்போகலாம் என்று அறிவாலய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதற்கு பின் உதயநிதியின் அறிக்கை தாண்டி வேறு ஒரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2 -3 மாதங்களாக தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக வட்டமடித்த செய்தி என்றால் அது அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திதான். அமைச்சரவையில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட போவதாக செய்திகள் வட்டமடித்தன.

முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின.

இலாக்கா மாற்றம்

இலாக்கா மாற்றம்

இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இளம் எம்எல்ஏக்களான டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. முக்கியமாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

 அமைச்சரவை பதவி

அமைச்சரவை பதவி

உதயநிதிக்கு இளைஞர் நலத்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று செய்திகள் கடந்த சில நாட்களாக வட்டமடித்து வந்தன. அதோடு உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று திருச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனால் திமுகவில் அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 சான்ஸ் இல்லை

சான்ஸ் இல்லை

ஆனால் இப்போதைக்கு அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை. அதற்கான சான்ஸ் குறைவு. அமைச்சரவை மாற்ற முயற்சிகள் தற்காலிகமாக தள்ளிப்போடப்படுகிறது என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின் உதயநிதியின் அறிக்கை தாண்டி வேறு ஒரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இப்போதைக்கு உட்கட்சி ரீதியான மாற்றங்களை மட்டுமே செய்ய அரசு முடிவு செய்துள்ளது. உட்கட்சி தேர்தல் தற்போது நடந்து வருகிறது.

நிர்வாகிகள் மாற்றம்

நிர்வாகிகள் மாற்றம்

இதற்காக ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் சில நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். புதிய முகங்கள் சிலருக்கு ஒன்றிய அளவில் பதவிகள் வழங்கப்பட உள்ளன. அதை மட்டுமே இப்போது மேற்கொள்ளலாம். இன்னும் சில மாதங்கள் கழித்து அமைச்சரவை மாற்றம் பற்றி முடிவு எடுக்கலாம் என்ற திட்டத்தில் திமுக தலைமை இருக்கிறதாம். 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக உட்கட்சி ரீதியில்தான் மாற்றம் செய்ய வேண்டும். அதுதான் இப்போது முக்கியம். அமைச்சரவை மாற்றம் அல்ல என்று திமுக தலைமை கருதுகிறதாம்.

பேசவில்லை

பேசவில்லை

இதனால்தான் அமைச்சரவை மாற்றம் பற்றிய எந்த தகவலுக்கும் முதல்வர் தரப்பில் இருந்து கமெண்ட் வரவில்லை. 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளனர். இதையடுத்து சில மாதங்களுக்கு பின் அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம். ஆனால் இப்போதைக்கு அமைச்சரவையில் கை வைக்க வேண்டாம் என்று ஆளும் தரப்பு நினைக்கிறதாம்.

உதயநிதி

உதயநிதி

அதோடு அரசுக்கு எதிராக சில விஷயங்களில் கடந்த மாதம் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்போது உதயநிதி அமைச்சர் ஆனால்.. வாரிசு அரசியல் என்ற வாதத்தையும் எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொள்ளும். சில அதிருப்திகள் அடங்கட்டும். அதன்பின் பார்க்கலாம் என்று திமுக நினைக்கிறதாம். இப்படி அமைச்சரவை மாற்றம் தாமதம் ஆகலாம் என்ற விவரம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும் தெரிந்து இருக்கிறதாம். அதனால்தான் அவரும்.. அமைச்சரவை மாற்றம் தாமதம் ஆகலாம்.. இப்போது போய் எனக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறார்களே.. இதனால் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது போல் ஆகிவிடுமே என்று கருதுகிறாராம்.

கட்சி ரீதியாக மாற்றம்

கட்சி ரீதியாக மாற்றம்

இதன் காரணமாகவே அன்று உதயநிதி ஸ்டாலின் சார்பாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது... மொத்தத்தில் இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் இருக்காது.. கட்சி ரீதியாகவே மாற்றம் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு எதுவும் வேண்டாம்.. ஒரு வருடம் தானே ஆகிறது என்று ஆளும் தரப்பு நினைக்கிறதாம். சமீபத்தில் நிறைய ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டனர். இனி கட்சி நிர்வாகிகளும் மாற்றம் செய்யப்பட உள்ளனர். எனவே அமைச்சரவை மாற்றத்திற்கு சில காலம் பிடிக்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+