சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் இந்த டிடிஎஃப் வாசன்? 2k கிட்ஸ் கொண்டாட காரணம் என்ன? இப்படி வேணா செய்து பாக்கலாமே? நல்ல ஐடியா!

Google Oneindia Tamil News

சென்னை : இணையதளங்களிலும் சரி சமூக வலைதளங்களிலும் சரி கடந்த இரண்டு நாட்களாக டிடிஎஃப் வாசன் என்ற பெயர் அடிக்கடி அடிபடுவதை ஏராளமானோர் பார்த்திருப்பார்கள் குறிப்பாக 90 கிட்ஸ்களுக்கு டிடிஎஃப் வாசன் யார் என்று தெரியாது என்றாலும் 2கே கிட்ஸ்களுக்கு அவர் மிகப் பிரபலம்..

Recommended Video

    Who Is TTF Vasan? | TTF Vasan-க்கு Police கொடுத்த Warning | TTF Fans Meet *TamilNadu

    மின்னல் வேகத்தில் மட்டும் பைக் ஓட்டுவதால் அவருக்கு இவ்வளவு ரசிகர்களா? என பல்வேறு கேள்விகள் இருந்தாலும், அதிவேகத்தில் வாகனங்களை இயக்க சொல்லி, 2கே கிட்ஸ் இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.

    கோவையில் சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி கொண்டிருந்த வாசன் டிடிஎஃப் வாசன் ஆனது எப்படி, சுமார் 27 லட்சம் பேர் பின் தொடரும் அளவுக்கு அவரிடம் என்ன இருக்கிறது?

    சென்னைக்கு வந்த TTF வாசன்..யூட்யூப் பிரபலத்தால் நடந்த களேபரம்..ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்ற போலீசார்சென்னைக்கு வந்த TTF வாசன்..யூட்யூப் பிரபலத்தால் நடந்த களேபரம்..ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்ற போலீசார்

    டிடிஎஃப் வாசன்

    டிடிஎஃப் வாசன்

    சாதாரண ஒரு youtube பிறந்த நாளுக்காக இவ்வளவு பெரிய கூட்டம் என பலரும் கடந்த சில நாட்களாக விவாதித்துக் கொண்டிருக்கின்றார் சமூக வலைதளங்களில்.. சொல்லப்போனால் ஒரு நடிகர் வந்தால் கூட இவ்வளவு கூட்டம் இருக்குமா எதற்காக இந்த இளைஞர்கள் அவர் பின்னால் பித்து பிடித்து அலைகின்றனர். இது போன்ற பேச்சுகளையும் கமென்ட் செக்ஷன்களில் பார்க்க முடிகிறது. உண்மையிலேயே அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றால் அதுவும் உண்மைதான்.

    சாலை விபத்துகள்

    சாலை விபத்துகள்

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவற்றில் சிக்குபவர்கள் 15 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான். மது போதை, அளவுக்கு அதிகமான வேகம், சூப்பர் பைக்குகளில் சாகசம் என விபத்துகளில் சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாகவே இளைஞர்கள் என்றாலே பைக் மீது அலாதி பிரியம் இருப்பது அனைவருக்கும் தெரியும் பைக் வாங்கித் தரவில்லை என ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூட இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் பேசுபொருளானது.

    அடுத்த பப்ஜி மதன்?

    அடுத்த பப்ஜி மதன்?

    அந்த அளவுக்கு பைக்குகள் மீது காதல் கொண்டிருப்பவர்கள் வாசன் போன்றவர்கள் பின்னால் செல்வது சாதாரணமானது தான். அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை 250 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் ஓட்டுவது வீலிங் செய்வது போன்ற சாகசங்களை காட்டி இளைஞர்களை மாற்றக்கூடாது. ஒருவகையில் டிடிஎஃப் வாசன், பப்ஜி மதன் போலத்தான் என்கின்றனர் சமூக வலைதள வாசிகள். பப்ஜி மதன் விளையாட்டின் மூலம் ஆபாச வார்த்தைகளை பேசி ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். இவர் ஆபத்தான சாகசங்களை காட்டி இளைஞர்களை வசப்படுத்துகிறார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    என்ன செய்ய வேண்டும்?

    என்ன செய்ய வேண்டும்?

    டிடிஎஃப் வாசன் தன்னை விரித்தனமாக ஃபாலோ செய்யும் 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வதாக தோன்றவில்லை. அதே நேரத்தில் பப்ஜி மதன் போல அவரை நடத்துவதும் சரியாக இருக்காது. நன்கு அவருக்கு பயிற்சி கொடுத்து இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கான வேலைகளை தான் செய்ய வேண்டும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், முதியோர்களுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை தயாரித்து தனது ரசிகர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது போல கூற வேண்டும். இதுதான் நன்மை பயக்குமே தவிர பப்ஜி மதன் போல இவரையும் நடத்தினால் விவகாரம் வேறு மாதிரி தான் முடியும்.

    English summary
    Many people have seen the name TTF Vasan being mentioned frequently on websites and social media for the past two days, especially 90 kids don't know who TTF Vasan is, but he is very popular among 2K kids.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X