சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளி கொலை வழக்கில் மனைவி கைது..குடியால்அழிந்த குடும்பம்
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக இருந்த பாலகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
சென்னை நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், 2-வது தெருவைச் சேர்ந்த 44 வயதாகும் பாலகிருஷ்ணன் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கனகவள்ளி. இவருக்கு 34 வயது ஆகிறது. இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். பாலகிருஷ்ணன், கனகவள்ளி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 10-ம் வகுப்பும், 2-வது மகன் 7-ம் வகுப்பும் தியாகராய நகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்..

பாலகிருஷ்ணன், கனகவள்ளி தம்பதியின் வாழ்க்கையை குடிப்பழக்கம் அடியோடு அழித்திருக்கிறது. பாலகிருஷ்ணன் திடீரென குடிப்பழக்கத்திற்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளார். தினமும் குடிக்க தொடங்கி உள்ளார். தினமும் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பும் போது சரக்கு அடித்துவிட்டு போதையில்தான் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்படி வீட்டிற்குள் பாலகிருஷ்ணன் வரும் போதே மனைவி கனகவள்ளியுடன் சண்டை போட்டு அடிப்பாராம். தினமும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனையைள கிளப்பி சண்டை போடுவதை பாலகிருஷ்ணன் வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 4ம் தேதி இரவு வழக்கம் போல் முழுபோதையில் வந்த பாலகிருஷ்ணன், வழக்கம்போல மனைவி கனகவள்ளியிடம் சண்டை போட்டு, அவரை அடித்து உதைத்தாராம். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத கனகவள்ளி, பாலகிருஷ்ணனை தள்ளி விட்டுள்ளார். அதில் பாலகிருஷ்ணனின் தலை சுவரில் பட்டு, காயம் அடைந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் கனகவள்ளி இப்போது சிறையில் இருக்கிறார். அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் இப்போது ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கணவனின் குடிப்பழக்கம் மொத்த குடும்பத்தையும் சிதைத்திருக்கிறது. பாலகிருஷ்ணன் குடும்பம் மட்டுமல்ல, பல குடும்பங்கள் குடிப்பழக்கத்தால் தான் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு முன்னேற முடியாமல் தவித்து வருகின்றன. பல குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் மாற இந்த குடிப்பழக்கமே முதன்மையான காரணம் ஆகும்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications