சசிகலாவுக்கு கிடைக்க போகும் சான்ஸ்? முடிவுக்கு வருகிறதா ஒற்றை தலைமை.. விட்டு கொடுப்பது இவரா? அவரா?
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அன்று அவர் தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சி, இன்று ஒற்றைத் தலைமைக்காக போராடி வருகிறது.
ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகளின் குரல்கள் எப்படியிருக்கும் என்பது கூட பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபையில் அவர்கள் பேசும் போது குரல்களை கேட்பதோடு சரி! மற்ற நேரங்களில் எல்லாமே ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கினால் சிறை செல்ல நேரிட்டுவிட்டது.

அதிமுக
இதையடுத்து அதிமுகவில் அடிமட்ட நிர்வாகி வரை அனைவரும் வீதிக்கு வந்து பேசி வந்தனர். சசிகலா, தினகரன் கட்சிக்குள் வராமல் இருக்க பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை சேர்த்தனர். இதில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்தனர்.

இரட்டை தலைமை
இவர்கள் இருவரும் அதிமுகவுக்கு இரட்டை தலைமைகளாகிவிட்டனர். அன்றிலிருந்தே லேசாக புகைந்து கொண்டு வந்த பிரச்சினை இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. நிறைய விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வந்தார்கள். சில அறிக்கைகளை கூட இருவரும் தனித்தனியே வெளியிட்ட தருணங்களும் உண்டு.

ஒற்றை தலைமை
சில காலத்திற்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு எழுந்தது. காரணம் இரு தலைவர்கள் இருப்பதால் இரு கோஷ்டிகளாக பிரிந்து அதிமுகவினர் செயல்பட்டு வந்தனர். கட்சி பதவிகள்,வேட்பாளர்கள் தேர்வு இவையெல்லாம் பெற இரு தலைமையின் ஆதரவாளர்களுக்குள்ளேயே போட்டிகள் இருந்தன. இவ்வாறு குழுக்களாக பிரிந்து கிடந்ததால் பொதுவான நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற ஒரு புள்ளியில் அதிமுக இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நகர்ப்புற தேர்தல்
இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிடும் அதிமுக வென்றுவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என அதிமுக தலைமை நினைத்தது. காரணம் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் மக்கள் தங்களை ஆதரிப்பர் என கருதினர். ஆனால் நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ததால் கட்சியில் முக்கிய முடிவை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தொண்டர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக இரட்டை தலைமைக்கு அழுத்தங்கள் வருவதாகவும் தெரிகிறது.

ஜெயக்குமார்
இந்த சூழலில் சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை, பார்க்க ஓபிஎஸ்ஸை அழைத்து செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் சென்றிருந்தார். அது போல் நேற்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் ஓபிஎஸ்ஸை தனித்துவிட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமி சென்றிருந்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ஒற்றை தலைமை குறித்து பேசியிருந்தனர்.

மீண்டும் ஒற்றை தலைமை
கட்சி கரையாமல் இருக்க ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கியுள்ளது. அந்த ஒற்றை தலைமைதானாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் கருதுகிறார்கள். இருவரது தலைமையுமே வேண்டாம் என்பது நடுநிலையாக இருக்கும் தொண்டர்களின் கருத்து. இரட்டை தலைமையின் கீழ் இருக்கும்போது இரு தலைமையின் ஆதரவாளர்களே பலனடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

சசிகலா தலைமை
எனவே எல்லாவற்றிற்கும் பொதுவானவராக சசிகலா தலைமையின் கீழ் அதிமுக இயங்கினால்தான் சரியாக இருக்கும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் சசிகலா அதிமுகவில் வருவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு விருப்பம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி விடுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை கட்சி உடையாமல் இருக்க சசிகலா தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றால் என்ன தவறு என்ற கேள்விகளும் எழுகின்றன. சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வரக் கூடாது என்றால் அதற்கு சசிகலாவுக்கு எதிரானவர்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதாவது ஓபிஎஸ்ஸின் கீழ் அதிமுக என்ற நிலை ஏற்பட வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிப்பாரா என தெரியவில்லை.

யார் அந்த ஒற்றை தலைமை
திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அந்த வகையில் அண்மையில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து பேசிய அமைச்சர் பெரியசாமி, காலபோக்கில் திமுகவில் அதிமுக ஐக்கியமாகிவிடும் என கூறியிருந்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இரு தலைமைகளுக்குள் இருக்கும் பிரச்சினையால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டி காப்பாற்றிய அதிமுக தேய்ந்துவிடக் கூடாது என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. எனவே அதிமுகவுக்கு தலைமையேற்பது எடப்பாடி பழனிச்சாமியா, ஓ பன்னீர் செல்வமா இல்லை சசிகலாவா என்பது இனிதான் தெரியவரும்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications