ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் இருக்கட்டும்.. அதிமுகவுக்கு இன்னொரு பெரிய சிக்கல்.. தொண்டர்கள் ஷாக்.. என்னாச்சு?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்துள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 510 பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படியே அதிமுக சார்பில் யாரும் போட்டியிட்டாலும், அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வியும், குழப்பங்களும் எழுந்துள்ளன.

அதிமுக மோதல்
வரும் ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மா.செக்கள் கூட்டத்தில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வலுவடைந்துள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து பொதுச் செயலாளராவதற்கு எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். ஆனால், சட்ட விதிகளின்படி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவர முடியாது என்று பன்னீர்செல்வம் தரப்பு கூறி வருகிறது.

எடப்பாடி தீவிரம்
எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ மாவட்டச் செயலாளர்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் கொண்டுவர முயன்று வருகின்றனர். அதிமுகவில் இருக்கும் 75 மாவட்ட செயலாளர்களில் 60க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருப்பதால் தனித்தீர்மானம் கொண்டு வந்துவிடலாம் என ஆலோசித்து வருகின்றனர். அதேநேரம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழுவால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

சின்னம் முடங்கும்?
ஒற்றைத் தலைமை கொண்டு வரப்பட்டால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக்குறியாகும் என்றும், தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டைத் தலைமையின் பதவிக்காலம் முடிவதற்குள் பொதுக்குழுவால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும், மாற்றினால் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் என மொத்தம் 510 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 20-ஆம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இணைந்து
தேர்தல் நடைபெற இருக்கும் 510 பதவிகளில் 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும், 22 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. இந்த பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டால் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கையெழுத்திட வேண்டும். தற்போதுள்ள மோதல் சூழலில் இருவரும் இணைந்து கையெழுத்து போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேட்பாளர்கள்
நாளையே உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதால் உடனடியாக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான பணிகளில் ஈடுபடுவார்களா? இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போட்டியிடுமா?
ஒருவேளை, அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் கூட அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என்றால், அங்கீகார கடிதத்தில் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் கையெழுத்திட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் போட்டியாக தேர்தலில் களமிறங்கினால் என்னாகும் என்ற அச்சமும் அதிமுக தொண்டர்களிடையே நிலவுகிறது. இரு தரப்பினரும் போட்டியிட்டால் யாருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என கட்சியினர் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications