"சீன்"லயே இல்லையே.. "அவரை தூக்குங்க".. பாஜகவின் செம மூவ்.. திணறும் அதிமுக.. குழம்பும் சசிகலா
டிடிவி தினகரனை வைத்து பாஜக அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது
சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலை கணக்கில் கொண்டு, தமிழக பாஜக மிக சரியான காய் நகர்த்தல்களை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
ஒருபக்கம் சசிகலாவிடம் விசாரணை, மறுபக்கம் டிடிவி தினகரனிடம் விசாரணை, கொடநாடு விஷயத்தில் தேவைப்பட்டால் எடப்பாடியிடம் விசாரணை என தமிழகம் பரபரத்து கிடக்கிறது.. இதனிடையே வரப்போகும் எம்பி தேர்தலை முன்னிட்டு இப்போதே தமிழகத்தில் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டது தமிழக பாஜக..
சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பாஜகவின் சித்தாந்தம் என்பது தமிழ் மண்ணை சார்ந்ததுதான். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.

பாஜக
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை என்றாலும், ஆன்மீகத்தை மட்டுமே எடுத்து, மக்களிடம் பிரச்சாரம் செய்து, வாக்குகளை அள்ளி ஆட்சியை பிடித்துவிடுமா என்பது மிகப்பெரிய சந்தேகம்தான்.. அதேசமயம், அதிமுகவை பிரிந்து நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிட்டதையடுத்து, கூடுதல் தெம்புடன் தமிழக பாஜக வலம் வந்து கொண்டிருக்கிறது... மற்றொருபுறம் திமுகவை டேமேஜ் செய்யும் வேலையையும் மிக சரியாக செய்து வருகிறது.. திமுகவை எதிர்த்தும், விமர்சித்தும் அதிமுக போராட்டம் செய்கிறதோ இல்லையோ, அண்ணாமலை வாரம் ஒரு போராட்டத்தையாவது அறிவித்து வருகிறார்.

அதிருப்திகள்
அதேசமயம், கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் பாஜக மும்முரமாகி உள்ளது.. குறிப்பாக, திமுக, அதிமுக, பாமக, மதிமுக, என நாலாபக்கமும் உள்ள கட்சிகளில் அதிருப்திகள் யார் என்பதை பார்த்து கொக்கி போட்டு தூக்கும் வேலையில் இறங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.. பாஜகவுக்கு யார் சென்றாலும், முக்கிய பதவி தரப்படும் என்பதால், பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. ஆனாலும், உடனடியாக முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதால், பொறுமை காத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

காய் நகர்த்தல்
இதனிடையே, கூட்டணியை பலப்படுத்த முக்கிய கட்சிகளை குறி வைத்தும் காய் நகர்த்தல் ஆரம்பமாகி உள்ளது.. அந்த வகையில் முதலில் சிக்கி உள்ளவர் டிடிவி தினகரன் என்றே தெரிகிறது.. காரணம், தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. ஆனால் ஏனோ ஆர்கே நகர் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. எனினும் ஒருகுறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை தக்கவைத்தபடியே வருவது டெல்லியை கவனிக்க வைத்துள்ளது.

சாதி முத்திரை
சசிகலா விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக, பெரிதாக வாய் திறக்கவில்லை.. மேலிட ஆதரவை தொடர்ந்து எதிரபார்த்து காத்து கிடக்கும் சசிகலாவுக்கு இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கப்பெறவில்லை.. ஆனால், சசிகலாவை வைத்து கட்சிக்கு பெரிதாக லாபம் எதுவுமில்லை என்று பாஜக தரப்பு நினைக்கிறது.. தென்மண்டலங்களில் மட்டுமே செல்வாக்கு இருப்பவரை பொறுப்பில் அமர்த்தினால், அதிமுக பலவீனப்படுவதுடன், சாதி ரீதியான முத்திரை கட்சிக்கு அதிகமாக விழுந்து விடும் என்று கணக்கு போடுகிறது.

லாபக் கணக்கு
இதனால் பாஜகவுக்கும் லாபம் கிடைக்க போவதில்லை என்பதால், சசிகலாவை ஆதரிக்க தயங்குகிறது. அதற்கு பதிலாக, தினகரன் மீது பாஜகவின் கண் விழுந்துள்ளது.. இது இப்போதில்லை.. கடந்த எம்பி தேர்தலின்போதே பாஜகவுக்கு இந்த எண்ணம் இருந்ததாக செய்திகள் வந்தன.. ஆனால், தினகரனோ, சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்து, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சிகளுடன் அப்போது கூட்டணி வைத்தார்..

ஒவைசி கூட்டணி
சிறுபான்மையினர் ஓட்டுக்களை எவ்வளவுக்கெவ்வளவு அமமுக பிரிக்கிறதோ, அது அப்படியே திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள்தான் என்றும் கணிக்கப்பட்டது.. இதைதான் பாஜகவும் எதிர்பார்த்தது.. ஒருவேளை ஓட்டு வங்கி தினகரனுக்கு அதிகமானால், இதை வைத்து வேறு விதமான காய்நகர்த்தல்களை ஆரம்பிக்கவும் பாஜக பிளான் செய்திருந்தது.. இப்போதும் அதே திட்டத்தைதான் முன்னெடுப்பதாக தெரிகிறது.. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு கணிசமான லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என மேலிடம் விரும்புகிறது..

சாப்ட் கார்னர்
இது எல்லாவற்றையும்விட, ஆரம்பத்திலிருந்தே தினகரன் மீது டெல்லி மேலிடத்திற்கு சாப்ட் கார்னர் இருந்து வருகிறது. அந்த வகையில் அமமுக மீது தன்னுடைய கவனித்தை கூடுதலாகவே திருப்பி, அக்கட்சியின் அசைவுகளை கவனித்து வருகிறதாம் பாஜக.. அப்போதுதான், பலம்பொருந்திய ஸ்டாலினின் திமுகவை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றும் பிளான் நடப்பதாக தெரிகிறது.

டிடிவி தினகரன்
அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் அந்த கட்சி போட்டியிட்டு பிரித்த வாக்குகள் எல்லாம் அதிமுக வாக்குகளாகும்.. அந்த தேர்தலின்போதே அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெற்றிருந்தால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்பதே டெல்லி யோசிக்கிறது. இதை எல்லாம் மனதில் வைத்தே, இரட்டை இலை சின்னம் லஞ்சம் வழக்கு விறுவிறுப்பாகி உள்ளது.. அது இப்போது சூடுபிடித்தும் விட்டது. எப்போதும் சிரித்தபடியே இருக்கும் கூல் கேப்டன், டென்ஷனுடன் டெல்லிக்கு பறந்து கொண்டே இருக்கிறார்

கூல் தலைவர்
இந்த கேஸ் மூலம் டிடிவிக்கு டென்ஷனை ஏற்றி, அதன்மூலம் செக் வைத்து, அதன்மூலம் கூட்டணிக்குள் இழுத்து போடும் வேலை நடக்கப்போவதாக சொல்கிறார்கள்... இன்னொரு பக்கம் சசிகலாவுக்கும் விசாரணை என்ற பெயரில் செக் வைப்பது நடந்து வரும் நிலையில், பாஜகவின் கணக்கு கூட்டி கழித்து பார்த்தால் லாபம் கிடைக்கவே வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. பார்ப்போம்..! ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications