தமிழ்நாடு வரும் மோடி.. எடப்பாடிக்கு லட்டு மாதிரி போகும் "ஆஃபர்".. எல்லாமே தலைகீழாக மாறுது! ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரம் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க மாட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. பாஜக - அதிமுக இடையே கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்தான் இந்த செய்திகள் வர தொடங்கி உள்ளன.

சமீபத்தில் திருச்சி விமான நிலையம் உட்பட திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில். 2024-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Will Edappadi Palanisamy meet PM Modi and return to BJP AIADMK alliance in Tamil Nadu?

விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது, என்று கூறினார்.

மோடி - எடப்பாடி மோதல்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பொதுவாக மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் எடப்பாடி சந்திப்பது வழக்கம். சண்டை போட்டு நேரம் வாங்கி குறைந்தபட்சம் விமான நிலையத்திலாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிடுவார். ஆனால் இந்த முறை எடப்பாடி அப்படி சந்திப்பு நடத்தவில்லை.

சென்னையில் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடந்த முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. இதில் கூட பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பேசி இருந்தார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதியாக உடைத்து பேசி இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று மோடியை சந்திக்காமல் எடப்பாடி அமைதியாக இருந்தார்.

மீண்டும் வருகை: ஜனவரி 19ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உதாரணமாக கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் 19ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனத்தில் வைத்து பிளான் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். அதன் பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி புனிதநீரை எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது.

இதனால் அங்கே உள்ள கடல் நீர் புனிதமாக கருதப்படுகிறது. அந்த கோவில் உள்ளே இருக்கும் தீர்த்தமும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இதைத்தான் மோடி எடுத்து செல்ல இருக்கிறாராம். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அயோத்தி கோவில்: அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று பால ராமர் விக்ரக ஊர்வலம் அங்கே நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று பால ராமர் விக்ரக ஊர்வலம் அங்கே நடைபெற உள்ளது.

என்று திறக்கப்படும்?: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

சந்திப்பு இல்லை; பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதையடுத்தே தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க மாட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. பாஜக - அதிமுக இடையே கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்தான் இந்த செய்திகள் வர தொடங்கி உள்ளன.

எதிர்க்கவில்லை: அதே சமயம் பாஜகவை எங்கும் எடப்பாடி நேரடியாக எதிர்க்கவே இல்லை. எந்த இடத்திலும் பாஜகவிற்கு எதிராக அவர் கருத்து சொல்லவே இல்லை. உதாரணமாக பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்ற எடப்பாடி, 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் எடப்பாடி.. குற்றவாளிகளை விடுதலை செய்த பாஜக அரசை பற்றி ஒரு வாரத்தை கூட கூறவில்லை. பாஜகவை விமர்சனம் செய்யாமல் மேம்போக்காக தீர்ப்பை மட்டும் வரவேற்றார்.

மீண்டும் கூட்டணி: இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள், தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.

2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். இதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் சமாதானம் பேச உள்ளனர்.

அழைப்பு: அதன்படி உத்தர பிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோவில் அடுத்த ஜனவரியில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடிக்கு அழைப்பு செல்ல உள்ளது. இந்த அழைப்பிதழ் மூலம் எடப்பாடிக்கு சமாதானம் சொல்ல யோகி வழியாக மோடிக்கு தூது விட மோடி திட்டமிட்டு உள்ளாராம். தேர்தலுக்கு ஜனவரியில் இருந்து 4 மாதமே இருக்கும் நிலையில்.. ஜனவரியில் கூட்டணியை இருந்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

அதோடு இல்லாமல் அதிமுகவிற்கு 4 எம்பிக்கள் இருந்தால் போது 4 அமைச்சரவை பதவிகளை வழங்குவோம். எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என்று பெரிய ஆபர் ஒன்றையும் கொடுத்து உள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+