சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்த்துட்டே இருங்க.. ரஜினி பல்டி அடிப்பார்.. முதல்வர் நாற்காலிக்கும் ரெடியாவார்.. ஒரு குபீர் பேச்சு

ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: "பார்த்துட்டே இருங்க.. திடீர்னு ரஜினி பல்டி அடிக்க போகிறார்... நான்தான் முதல்வர் என்று நாற்காலியில் உட்காரதான் போறார்" என்று அரசியல் நோக்கர்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் லீலா பேலஸில் பேசிய பேச்சினை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.. ஒவ்வொன்றையும் யோசித்துதான் பேசியிருக்கிறார்!

ஆனால் இந்த சந்திப்புக்கு முன்பே, அதாவது 2, 3 நாட்களாக தொடர்ச்சியாக சில தலைவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.. அதில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசு, செகு தமிழரசன், கராத்தே தியாகராஜன் போன்றோர்கள்!!

நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்.. அரசியல் அற்புதம் நிகழும்... ரஜினி அடம்நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்.. அரசியல் அற்புதம் நிகழும்... ரஜினி அடம்

ஆலோசனை

ஆலோசனை

இவர்கள் எல்லாருமே ரஜினியின் பலகாலம் நண்பர்கள் என்பதால் எந்த கேள்வியையும் எழுப்ப முடியாது.. அதே சமயம் இந்த சந்திப்பு குறித்த சில யூகமான தகவல்களும் கசிந்தன.. அவர்களிடம்தான் தன்னுடைய 3 திட்டங்களை ரஜினி சொல்லி கருத்தை கேட்டுள்ளார்.

அதிகாரம்

அதிகாரம்

அதற்கு அவர்கள் "நீங்கள் சொல்வது கரெக்ட்தான்.. ஆனால் தமிழக அரசியலை பொறுத்தவரை உங்க முகத்திற்குதான் மக்கள் ஓட்டு போடுவாங்க.. நீங்க சுட்டிக்காட்டும் நபரை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்.. அரசியல் மாற்றம் உங்களிடமிருந்து துவங்க வேண்டுமென்பதுதான் எல்லாருமே எதிர்பார்ப்பார்கள்... அந்த வகையில் அதிகாரம் உங்ககிட்டதான் இருக்கணும்.. யாரையோ ஒருத்தரை முதல்வராக்கினால், அவர் என்ன தப்பு செய்தாலும் அது உங்களைதான் பாதிக்கும்.. இதுவே முதல்வராக நீங்கள் உட்கார்ந்தால், எல்லாரும் பயப்படுவார்கள்.. என்று தெரிவித்துள்ளனர்.

திட்டங்கள்

திட்டங்கள்

இதில் திருநாவுக்கரசர் மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ரஜினி லீலா பேலஸில் 3 திட்டங்களையும் எடுத்து வைத்தார்.. அவரே நினைத்திருக்க மாட்டார், ஒன்றுகூட உருப்படியான திட்டம் எதுவும் இல்லை என்று.. அந்த அளவுக்கு இப்போதுவரை அந்த 3 திட்டங்களும் பேசு பொருளாக உருவெடுத்து வருகின்றன... எதிர்பார்த்த அளவுக்கு ரஜினியின் கருத்துக்கு வரவேற்பும் இல்லை.

நிலைப்பாடு

நிலைப்பாடு

இதையடுத்துதான் ரஜினி ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.. இத்தனை கடுமையான விமர்சனங்களை பார்த்து வரும் அவர், தன் நிலைப்பாட்டில் விரைவில் பல்டி அடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தானே முதல்வராக பதவியில் உட்காருவார் என்றும் கணிக்கப்படுகிறது. இதை பற்றி ஒருசிலரிடம் நாம் கருத்து கேட்டோம். அவர்கள் சொன்னதாவது:

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

"ஆமா.. அவர்தான் சிஎம்-ஆ வருவாரு பாருங்க.. எப்படியும் ஒரு சர்வேயை ரஜினிக்காக முரட்டுத்தனமாக தாங்கி வரும் "அந்த தரப்பு" எடுத்து வெச்சிருக்கவே செய்யும்.. அதுவும் செட்டப் ஆகவே இருக்கும்.. அதில் பெருவாரியான மக்கள் ரஜினியே முதல்வராக வேண்டும் என்று விரும்புவதாக சொல்லியிருப்பாங்க.. இந்த சர்வேயை காட்டி, மக்கள் விருப்பத்துக்கு மதிப்பு தந்து முதல்வராக அமர சம்மதிக்கிறேன்னு ரஜினி சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை.. சிஎம்-ஆ வர மாட்டேன் என்று அன்று சொன்னீர்களே என்று நாம யார் கேட்டாலும், "மக்கள் மனசை ஆழம் பார்க்க விரும்புகிறேன்னு.." தானே அன்னைக்கு சொன்னேன்னு சொல்லி சேஃபாக பதில் சொல்லவும் வாய்ப்பு இருக்கு.. அதனால, நடக்கிற அதிருப்தி, சர்ச்சை, எதிர்ப்புகளை பார்த்து எப்படியும் ரஜினியே பல்டி அடிச்சிடுவார்.. தான்தான் முதல்வர் என்றும் சொல்லவும் போகிறார்" என்கிறார்கள்.

தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

இதற்கேற்றபடி நேற்று இந்து ஆங்கில நாளிதழுக்கு தமிழருவி மணியன் ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.. அந்த பேட்டியிலும் ரஜினிதான் முதல்வர் என்று ஓயாமல் சொல்லி உள்ளார்.. "ரஜினி முதல்வராகும் வாய்ப்பை நிச்சயம் பெறுவார்.. அவர் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரோடு கைகோர்க்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள்.. வேறு ஒருவரை முதல்வராக முன்னிறுத்த போவதாக ரஜினி சொல்லி உள்ளது அவருடைய தனித்தன்மையை காட்டுகிறது.. ஒரு சதவீத ஓட்டுக்கள்கூட இல்லாத கட்சிகளின் தலைவர்கள்கூட முதல்வராக வருவோம் என்று சொல்லும் நிலையில், ரஜினிக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்ளும் ரசிகர்களும் இருந்தும்கூட அவர் முதல்வர் நாற்காலி மீது விருப்பம் இல்லை என்று சொல்வது ரஜினியின் பெருந்தன்மை.. ஆனால் ரஜினி முதல்வராகும் வாய்ப்பை பெறுவார்" என்று ஆணித்தரமாக சொல்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதனால் எப்படி பார்த்தாலும் ரஜினிகாந்த் தன் முடிவை பரிசீலனை செய்வார் என்றே தெரிகிறது... அதாவது வழக்கம்போல எதையாவது பேசிவிட்டு, பிறகு அதிலிருந்து பின் வாங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது... தனது பேச்சிலிருந்து மாறி வேறு ஒன்று பேசுவது ரஜினிக்கும் புதிதில்லைதானே?!

English summary
Will Rajinikanth be declared CM candidate and there is an expectation that Rajin will change his stand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X