புள்ளி வெச்ச நயினார்.. கோலம் போட்ட அதிமுக.. லட்டு போல அள்ளிய வெற்றி.. பாஜகவுக்கு இனிதான் சிக்கலே..!
அதிமுக வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா
சென்னை: தனித்து களமிறங்கியதன் பலனை அதிமுக அறுவடை செய்துள்ளது.. அக்கட்சி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாம்.. ஆனால், வரப்போகும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேருமா? என்ற சந்தேகம் இப்போதே கிளம்ப ஆரம்பித்துவிட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.. பாஜக மேலிடத்துக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையானவரும்கூட என்பதும் தெரிந்த விஷயம்தான்.
பாஜக மேலிடத்தை ஓபிஎஸ் பகைத்து கொள்ளாத அதேசமயம், தான் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மேலிடத்துக்கு சில விஷயங்களில் வளைந்து கொடுக்காமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதும் அறிந்த விஷயம்தான்.

பாஜக
ஆனால், சமீபகாலமாக ஓபிஎஸ்ஸிடம் மாறுதல் காணப்படுகிறதோ இல்லையோ எடப்பாடியிடம் நிறையவே மாற்றம் காண முடிந்தது.. குறிப்பாக பாஜகவுடனான உறவில் நெருங்கியே இருக்கிறாரோ என்ற பிம்பத்தையும் ஏற்படுத்த துவங்கினார்.. இதற்கு 3 உதாரணங்களை சொல்லலாம்.. 3 மாத காலமாகவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பாஜகவின் முழக்கத்தை எடப்பாடியும் கையில் எடுத்திருக்கிறார். 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பது பாஜகவின் முழக்கமாகும்.. இதற்கு இப்போதுவரை பெரிய அளவில் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை..

என்னாச்சு?
"மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்" என்று அன்று முதன்முதலில் இந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்ததே வாஜ்பாய் ஆட்சியில் துணைபிரதமராக இருந்த அத்வானிதான்.. அதைதான் இப்போது பாஜக முழங்கிவருகிறது.. இந்த விவகாரத்தை இதை இன்னும் ஓபனாக சொல்ல வேண்டுமானால், மாநிலங்களின் உரிமைகளை பறித்து விட்டு, மத்தியில் ஒரே ஆட்சி என்று கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.. அதன் தொடர்ச்சியாகத்தான், 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் "ஒரே தேசம், ஒரே தேர்தல்" இடம்பெற்றது.

எடப்பாடி பழனிசாமி
இதைதான் பாஜக சொல்வதைவிட அதிகமாக எடப்பாடி பழனிசாமி சொல்ல ஆரம்பித்துவிட்டதே தமிழக அரசியல் களத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்தால் திமுக ஆட்சியில் நீடிக்காது.. இந்த ஆட்சி இன்னும் கொஞ்சம் காலத்துக்குதான் என்று செல்லுமிடமெல்லாம் காட்டமாக நடந்து முடிந்த பிரச்சாரங்களிலும் பயன்படுத்தினார்.. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

கூட்டணி
அதேபோல, கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல், பாஜக தனித்து போட்டி என்று அறிவித்தபோது, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.. அப்போது, "உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகள் போட்டியிட்டு, அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.. அதனால்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது" என்றார்..

சான்ஸ் இல்லை
எடப்பாடி இப்படி சொன்னதுமே அவரது ஆதரவாளர்களான கேபி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் "ஏங்க இப்படி சொல்லிட்டீங்க? நமக்கு இதைவிட்டா வேற சான்ஸ் இல்லை, இப்படியே வரப்போகிற தேர்தலிலும் பாஜகவை விட்டு தனித்து போட்டியிடுவதுதான் சரி என்று கூறியுள்ளனர். அதற்கு எடப்பாடி, "இது உள்ளாட்சி தேர்தல்தானே.. எப்படியும் குறைவான வாக்குகளைதான் வாங்குவார்கள்... அவர்கள் பெறும் அந்த வாக்குகளை அடிப்படையாக வைத்து, வரப்போகும் எம்பி தேர்தலில் சீட் தந்துவிடலாம்.. 2 வருடம் இன்னும் பாஜக ஆட்சிதான்.. அவர்களை பகைத்து கொள்ள முடியாது" என்று அவர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.

ஓபிஎஸ்
அதேபோல, நீட் விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தையும் அதிமுக புறக்கணித்ததற்கு காரணமே எடப்பாடி பழனிசாமிதான் என்ற தகவலும் வெளிவந்தன.. "கூட்டத்தை நாம் புறக்கணித்தால் அதிமுகவுக்குத்தான் கெட்டப் பெயர் வரும். திமுகவுக்கு சாதகமாகிவிடும். பாஜகவின் முடிவுக்கேற்ப நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்?' என்று ஓபிஎஸ் சொல்லியும், எடப்பாடி ஏற்கவில்லையாம்.. கூட்டத்தை புறக்கணிப்போம் என அழுத்தமாக சொல்லி உள்ளார்.

தேர்தல் ரிசல்ட்
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு சாதகமாக மாறி கொண்டிருக்கம் சூழலில்தான் இன்றைய உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வந்துள்ளது.. எதிர்பார்த்தபடியே ஆளும்தரப்பு பெரும்பான்மையை கைப்பற்றிவிட, 2வது இடத்துக்கு அதிமுக வந்துள்ளது.. தனித்து போட்டியிட்ட பாஜக ஆங்காங்கே வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.. அதிமுகவின் இந்த வெற்றியானது 2 வகையான லாபத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டதால்தான் இந்த அளவுக்கு அதிமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று தொண்டர்களே பூரித்து சொல்கிறார்களாம்.

முத்தலாக்
கடந்த எம்பி தேர்தலிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க வேண்டியதுதான்.. ஆனால், முத்தலாக், சிஏஏ இயற்றிய சமயத்தில்தான், தேர்தலை பாஜகவுடன் இணைந்து அதிமுக சந்திக்க வேண்டி வந்தது.. அதிலும் இடைத்தேர்தல் சமயத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பகுதிகளுக்கு பாஜக தரப்பில் ஒருத்தர்கூட பிரச்சாரத்துக்கு வராமல் இருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

ஊராட்சி வார்டு
எம்பி தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலுமே பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.. இதனால் பாஜக வேண்டுமானால் லாபம் கிடைத்து 4 எம்எல்ஏக்களை பெற்றுக்காள்ள முடிந்ததே தவிர, அதிமுகவுக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை.. அதிலும் கடந்த மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றியை பெற்றிருந்தது.. திமுகவோ 139 இடங்களை அள்ளியது... அதேபோல ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலிலும் அதிமுக 212 இடங்களை வென்ற நிலையில், திமுக 982 இடங்களை அசால்ட்டாக பெற்றது.

புது தெம்பு
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்., சில இடங்களில் திமுகவை முந்திக் கொண்டு அதிமுக வெற்றியை சுவைத்துள்ளது.. இது திமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. மாநகராட்சிகளில் தவிர, மற்ற இடங்களில் அதிமுக சொல்லிக் கொள்ளும்படியான இடங்களை கைப்பற்றி உள்ளது. இது அதிமுக தரப்புக்கு இழந்து போன தெம்பை மீட்டு தந்துள்ளது.. இனி பாஜக இல்லாமல் நிம்மதியாக போட்டியிடலாம் என்ற தைரியத்தையும் தொண்டர்களுக்கு வழங்கி உள்ளதாம்..

நிர்வாகிகள் மனநிலை
தொண்டர்கள், நிர்வாகிகளின் மனநிலை இதுவென்றாலும், அதிமுக மேலிடம் என்ன நினைக்கிறது என்பதுதானே முக்கியம்.. மத்தியில் பாஜக 2 வருட காலம் இருக்க போகிறது என்பதால், மறுபடியும் எம்பி தேர்தலில் கூட்டணி வைக்க தயாராகுமா? அல்லது இதுதான் சாக்கு என்று தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப பாஜகவை கழட்டிவிட்டு தனித்து களமிறங்குமா? அல்லது எடப்பாடியின் வியூகம் பலிக்குமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று சொல்லி கொண்டிருக்கும் பாஜகவுக்கு இனிமேல் தான் சிக்கலே..!
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications