பெங்களூர் - சென்னை பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. உதவியாளரின் பாலியல் தொல்லை.. பகீர் புகார்!
சென்னை : பெங்களூரில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் வந்த இளம்பெண்ணுக்கு பேருந்து உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து ஆன்லைன் முன்பதிவு நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் தனியார் சொகுசுப் பேருந்து மூலமாக பெங்களூரில் இருந்து சென்னை வந்துள்ளார். இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பேருந்தில் வேலை செய்யும் உதவியாளர், அந்தப் பெண்ணிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், இதுகுறித்து பேருந்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்த இணையதள நிறுவனத்திற்கும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து முன்பதிவு இணையதள நிறுவனம் பதிலளிக்காத நிலையில், பாலியல் சீண்டலாலும், அதுகுறித்து புகார் தெரிவித்தும் பதில் அளிக்காத இணையதள நிறுவனத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளானதால், பேருந்தை முன்பதிவு செய்த இணையதள நிறுவனம் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்தப் பெண், இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications