"காப்பாத்துங்க".. அரைகுறை ஆடையுடன் ஓடி வந்த பெண்.. பங்களாவில் என்ன நடந்தது.. பொதுமக்கள் ஷாக்!
சொகுசு பங்களாவில் இருந்து அலறி ஓடிவந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை: ஒரு சொகுசு பங்களாவில் இருந்து, அரைகுறை ஆடையுடன், "காப்பாத்துங்க" என்று இளம் பெண் ஒருவர் பதறி அடித்து கொண்டே ஓடிவருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியாகி நின்றனர்!
மாமல்லபுரத்தில் நிறைய சொகுசு பங்களாக்கள், ஆடம்பரமான காட்டேஜ்கள் உண்டு. பெரும்பாலான விஐபிக்கள் ரெஸ்ட் எடுக்க இங்குதான் வருவார்கள்.. குறிப்பாக வார இறுதி நாட்களில் பார்ட்டயே நடத்தி அமர்க்களப்படுத்துவார்கள்.
மற்ற நாட்களில் அவை பூட்டி வைத்திருப்பார்கள்.. அதேபோல, இந்த பங்களா, காட்டேஜ்களை பார்த்து கொள்ள செக்யூரிட்டிகளும் வேலைக்கு இருப்பார்கள்.. இப்போது லாக்டவுன் என்பதால், இன்னும் நிசப்தம் நிலவி கொண்டிருக்கிறது.

கோபாலபுரம்
இந்த இடத்தில் விளம்பரம் பட புரொடியூசர் ஒருவருக்கு சொந்மான பங்களா ஒன்று உள்ளது.. இவர் கோபாலபுரத்தை சேர்ந்தவராம்.. இந்த பங்களாவின் வாட்ச்மேன் ராஜேந்திரன்.. அங்கேயே ஒரு சின்ன வீட்டில் குடும்பத்துடன் தங்கி வருகிறார். சம்பவத்தன்று அந்த பங்களாவின் பின்பக்கம் உள்ள மரத்தில் ஏறி மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்துள்ளது. இதை ராஜேந்திரன் பார்த்துவிட்டார்.

பங்களா
அவர்களை தடுக்க முயன்றபோது, அந்த கும்பல் ராஜேந்திரனை கத்தியால் தாக்கினர்.. அவரது மாமனார், குழந்தைகளை வாயை கட்டிவிட்டு, ஒரு ரூமுக்குள் போட்டு அடைத்தனர்.. பிறகு ராஜேந்திரன் மனைவியை மட்டும் இழுத்து சென்று, பங்களாவை திறக்க சொன்னார்கள்.. ஒவ்வொரு ரூமையும் அவர் திறந்து காட்டி உள்ளார்.. ஆனால், நகை, பணம் எதுவுமே அந்த பங்களாவில் இல்லை.

ஆத்திரம்
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த டிவியை அடித்து நொறுக்கினர்.. பணம், நகை எதுவுமே கிடைக்காத ஆத்திரத்தில், ராஜேந்திரன் மனைவியின் துணியை முழுதுமாக கிழித்து அசிங்கப்படுத்தினர்.. அவர் காதில் இருந்த கம்மலை பிடுங்கி கொண்டனர்.. ராஜேந்திரன் குழந்தையின் காலில் இருந்த கொலுசைகூட கழட்டி எடுத்து கொண்டு மாடி வழியாக தப்பி ஓட முயன்றனர்.

மானபங்கம்
ராஜேந்திரன் மனைவியின் துணியை கிழித்துவிட்டதால், அலங்கோலமான நிலையில் வெளியே வரமாட்டார் என கொள்ளையர் நினைத்தனர்.. ஆனாலும் "காப்பாத்துங்க" என்று பங்களாவில் இருந்து வெளியே ஓடிவந்தார் அவர்.. இதை பார்த்து அந்த வழியாக சென்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டி பிடித்தும் முடியவில்லை.. அவர்கள் தப்பிவிட்டனர்.

படுகாயம்
படுகாயங்களுடன் இருந்த ராஜேந்திரன், அவரது குடும்பத்தினரை மீட்டு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் அனுமதித்தனர். இதற்கு பிறகுதான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அந்த பகுதியில் இருந்த எல்லா சிசிடிவி கேமராக்களையும் நொறுக்கிவிட்டு, அதனுள் இருந்த ஹார்ட் டிஸ்க்கையும் இவர்கள் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இப்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. அவர்கள் யார் என்று தேடி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications